என் மலர்
திருவாரூர்
- மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் தாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், அதனை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினருடன் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் முறைகேடாக மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, அவ்வாறு உறிஞ்ச ப்படும் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிக்கப்படும் மற்றும் மின்மோட்டார்கள் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, ஒரு சில இடங்களில் மட்டுமே இணைப்புகள் துண்டிக்கப்ப ட்டது.
எனவே, உடனடியாக முறைகேடாக எடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
- தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது வழங்கப்படும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போ ராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதற்காக நேற்று அந்த அமைப்பை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கோவிலூர் செயல் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், போராட்டக்குழு சார்பில் அமைப்பின் மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட தலைவர் துரையரசன், நாகை மாவட்ட தலைவர் விவேக் திரயகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயலாளர் குன்னலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் நெல் விவசாயிக்கு வழங்கப்பட்ட தற்காலிக ரசீதை அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம், தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது தேங்காய்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு வழங்கப்படும், ஆர்.டி.ஆர். பதிவிற்கு விண்ணப்பம் தெரிவிக்கப்படுகிறது என உறுதியளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.
- தேன் எடுக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி ஆணைப்படி, வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துப்பேட்டை சாமிநாதன் உத்தரவின்படி தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.
விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமை தாங்கினர். இதில் தேனீ பூச்சிகளோடு கலந்த பெட்டிகள் கூடுதலான பெட்டிகள், தேன் எடுக்கும் கருவிகள், மூலம் தேன் எடுக்கும் முறை பற்றியும் விவ சாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில் தென்னை, வாழை, மாமரங்கள், பழ மரங்கள் காய்கறி செடிகள், பூச்செடிகள் போன்றவைகள் இருப்பதன் மூலம் தேனிகளால் மகரந்த சேர்க்கை நடைபெற்று அதன் மூலம் அதிகமாக மகசூல் பெற முடிகிறது அதுமட்டுமின்றி தேன் அதிகளவில் பெறவும் ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் இதனால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
மேலும் விவசாயிகள் கூறுகையில்:-
தேனீ வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கத்தின் போது இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இடும்பாவனம் கிராம விவசாயிகள் கூறினர்.
- நீலக்குடி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
- வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
திருவாரூர்:
திருவாரூர் மின்வாாிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலக்குடி துணைமின்நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
இதனால் இந்த துணைமின்நிலைத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், நன்னிலம் துணை மின்நிலையம் மற்றும் நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர்,
பிபல்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரை மங்கலம், காரையூர், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-ந் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்வினியோம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
- சிலையை விற்பனைக்காக கொடுத்தவர் மற்றும் இது தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கடைத்தெருவில் கண்ணன் (வயது 53) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் சூர்யபிரகாஷ் (23).
இந்த நிலையில் இவரது வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் 1000 ஆண்டுகள் பழமையான செப்பு நாணயங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணன் வீட்டிற்கு சிலை வாங்க செல்வது போல் உள்ளே சென்றனர்.
பின்னர், வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் 1000 ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை, 1 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் 1000 ஆண்டுகள் பழமையான 750 கிராம் எடை உள்ள 2 செப்பு நாணயங்கள், ஒரு காலச்சக்கரம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இவை அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர். பின்னர், சூரியபிரகாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கோவிலை சேர்ந்த ஒருவரிடம் சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கியதும், விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மன்னார்குடியில் சிலையை விற்பனைக்காக கொடுத்தவர் மற்றும் இது தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.
- மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
- பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் பாலம் அருகே ஒரே ஒரு அரிய வகை மரம் உள்ளது.
இந்த மரத்தின் பெயர் பிங் ட்ரம்பெட் மரமாகும்.
இந்த வகை மரங்கள் அதிகளவில் பெங்களூரில் தான் காணப்படுகிறது.
இந்த பிங் ட்ரம்பெட் மரத்தில் மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
இதுவே சீசன் காலமாகும்.
தற்போது சீசன் தொடங்கிவிட்ட நிலையில் அழகிய இளஞ்சிவப்பு மலர்களுடன் காண்போரின் மனதை ஆர்ப்பரிக்கும் வகையில் இந்த மரம் காட்சியளிக்கிறது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிலர் பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.
ஆனால், அப்பகுதி மக்களுக்கு இந்த மரத்தின் பெயர் மற்றும் இதன் சிறப்புகள் தெரியவில்லை.
எனவே, பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மரத்தை யாரும் வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
- எர்ணாகுளத்தில் இருந்து நேற்று ஒரு மினி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
மன்னார்குடி:
கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 13 நபர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மினி வேன் மூலமாக புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் காவல் நிலையம் அருகில் வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததுமு விக்கிர பாண்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விக்கிர பாண்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயர் மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
திருவாரூர்:
திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே வலங்கைமான் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குபட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழஅமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
- 10 பவுன் மதிப்புள்ள 2 தாலி செயின்களை முகமூடி அணிந்து வந்த கும்பல் பறித்து சென்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது மனைவி பாக்யா (33).
இவர்கள் இருவரும் நாச்சியார்கோவிலில் உள்ள உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தென்கரையில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர்.
அப்போது புதுக்குடி என்கிற இடத்தில் 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் இந்த தம்பதி யினரை வழிமறித்துள்ளது.
கத்தியை காட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டி பாக்யாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்ததுடன் அவரது கணவரிடம் இருந்துசெல்போ னையும் பறித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிறிது தூரத்தில் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32) பானுமதி 26) என்கிற இருவரும் திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களையும் இந்த முகமூடி கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பானுமதி கழுத்தில் இருந்த தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.
மொத்தம் 10 பவுன் மதிப்புள்ள இரண்டு தாலிச் செயின்களை அடுத்தடுத்து இந்த முகமூடி கும்பல் பறித்து சென்றுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காட்சிகள் இருள் சூழ்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதே இடத்தில் வழிப்பறி பணத்தை அடித்து பறிப்பது போன்ற ஐந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமிராக்களை பொருத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- 16 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
- வெற்றிபெறும் அணிக்கு கோப்பைகளும், அணியை சேர்ந்த 20 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.
திருவாரூர்:
மாநில தரைப்பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 16-வது தரைப்பந்து போட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியினை திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகத் தலைவர் ஹபீப் முஹமது தொடங்கி வைத்தார்.
இதில் மாநில தரைப்பந்து கழக செயலாளர் விஷ்ணுவிகாஷ், மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கிரு ஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் பங்கு பெறுகின்றன.
ஒவ்வொரு அணியும் மூன்று முறை மற்ற அணிகளுடன் மோத உள்ளன.
இதில் இரண்டு பிரிவுகளிலும் தேர்வாகும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.
இதில் ஒரு அணிக்கு 20 நபர்கள் இருப்பார்கள். இதில் 6 நபர்கள் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள்.
மீதமுள்ள 14 நபர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.
மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகளும் அணியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முகாமில் 336 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- 112 பேர் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாரிமுத்து, ஆசிரியர்கள் பாலமுருகன், பாலசுப்பி ரமணியன், சேதுராமன், மீனாட்சி சுந்தரம், நூலகர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபிக் அனைவரையும் வர வேற்றார்.
முகாமை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
மேலும், பழமையான இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்விற்காக கண் சிகிச்சை முகாம் நடத்தி இருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
முகாமில் டாக்டர்கள் அக்சய் சஞ்சய் வாக், அக்சய் கிஷோர் உம்ரே, யுவராஜ் மாதவ், செவிலியர் மகா தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் 336 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.
அதில் 112 பேருக்கு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தெய்வ சகாயம், சக்கரபாணி, நடராஜன், விஜயகுமார், செல்வம், தமிழரசன், இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
- காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
திருவாரூர்:
மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவரது மனைவி பிரேமா. பிரேமா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.
இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.
தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.






