என் மலர்
திருப்பத்தூர்
- திருப்பத்தூர் கலெக்டர் அறிவுரை
- உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்த உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் கருத்தரங்கம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது, அரசு சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு தகுந்த பயிற்சிகளை எடுக்க வேண்டும்.
என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு அதை நோக்கி மட்டுமே நம்முடைய கவனம் செல்ல வேண்டும். எந்த ஒரு நடிகரையும் கொண்டாட வேண்டாம்.அவர்கள் பணத்துக்காக சினிமாவில் நடிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள்.
உங்களுக்காக கஷ்டப்படும் பெற்றோரை கொண்டாடுங்கள். உங்கள் ஆசிரியர்களை கொண்டாடுங்கள்.அது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது.
மாணவர்களிடம் நல்ல பழக்கம், ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, விடாமுயற்சி ஆகியவைதான் முன்னேற்றத்தை கொடுக்கும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். போதை பழக்கத் துக்கு மாணவ சமுதாயம் ஆளாகக்கூடாது" என்றார்.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் ஸ்ரீ வன காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட 4 அம்மனுக்கு கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மங்கல இசை சிறப்பு பூஜை வாஸ்து சாந்தி முதல் கால யாக பூஜை மற்றும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
அதன் பிறகு திருப்பத்தூர் சிவா ஸ்ரீ ரவி குருக்கள் மற்றும் சுவாமி நாத மகேஷ் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் அம்மையார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சாலையில் நிறுத்தி வைத்திருந்தபோது துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் வயது (45).
மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் வேனை நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம கும்பல் வேனிற்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனு கொடுத்த சில மணி நேரங்களில் நடவடிக்கை
- கலெக்டருக்கு பாராட்டு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் பகுதியில் சாராயம், மது அதிகளவில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளதனமாக விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே ஊர் பொதுமக்கள் சார்பில் பலமுறை எச்சரித்தும் சாராயம் விற்பனை நிறுத்தாததால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பாச்சல் பகுதிக்கு சென்று சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகஸ்வரி (வயது 55) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி (வயது 34) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து 15 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டரிடம் மனு அளித்த சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போலீசார் மற்றும் கலெக்டரை பாராட்டி வருகின்றனர்.
- போலீசார் தீவிர விசாரணை
- ரூ.10 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த தீவிபத்து ஏற்படும் முன்பு அந்த தொழிற்சாலை அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.
அதன் பின்பு தொடர்ந்து தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவி எரிந்தது 4 மணி நேரம் தொடர்ந்து எரிந்தது. இந்த தீயை அணைப்பதற்கு திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டன.
தீயை அணைக்க பொதுமக்களுடன் இணைந்து போராடி 4 மணி நேரத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் கம்பெனியிலிருந்த மிஷின்கள், மூலப் பொருட்கள் உள்ளிட்டவை அனைத்தும் எரிந்து சாம்பலானது.
இதன் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், தாசில்தார் குமார், வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார்,வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த தீவிபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற தீ விபத்திற்கு காரணம் என்ன என போலீசாரும், வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கும் பகுதியில் ஒரே காம்பவுண்ட்டில் இரண்டு ஊதுபத்தி தொழிற்சாலைகளும், ஒரு அகர்பத்தி மற்றும் கொசுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இவற்றில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பணிக்கு யாரும் வரவில்லை, இருப்பினும் இரவு நேரத்தில் 35 பேர் பணிக்கு வர இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிற்சாலைக்குள் இரவு 9.30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் கம்பெனியின் மேற்கூரைகள் சிதறி நான்கு புறமும் விழுந்துள்ளது. இந்த வெடி சத்தம் ஏறத்தாழ 2 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்திற்கு கட்டிடங்கள் அதிர்வுகளுடன் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் முறையாக அனுமதி பெற்று 3 தொழிற்சாலையில் ஒரே காம்பவுண்டில் இயங்கி வருகிறதா? வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் குழந்தை பிறந்தது
- வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கீழ் கன்றாம்பல்லி கிராமத்தை சேர்ந்த முனிஸ்வரி (வயது 40) கர்ப்பிணியான இவர் வெங்கடசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தார். இன்று காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் முனிஸ்வரியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஊசூர் அருகே செல்லும் வழியில் முனிஸ்வரிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் சார்லஸ் பிரசவம் பார்த்தார்.
அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு அருண்குமார் மற்றும் ரெயில்வே போலீசார் இன்று அதிகாலை ஒரிசா மாநிலம் ஆட்டியா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில மாண்டியா வரை செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள பொது ஜனரல் பெட்டியில் சந்தேகத்தின் பேரில் அமர்ந்து பயணம் செய்த வாலிபரின் 2 பேக்கை சோதனை செய்தனர். அதில் 2 பண்டல்களில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநில பெங்களூர் மாண்டியா பகுதியைச் சேர்ந்த சுமந்த் (வயது 21)என தெரியவந்தது.
அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- தகராறு குறித்து விசாரணை
- போலீசார் அறிவுரை
ஜோலார்பேட்டை:
நாட்டறபள்ளியை அடுத்த டோல்கேட் முத்தன பள்ளி பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 35). அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32).
இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வினோத்குமாருக்கும் மாசிலாமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாசிலாமணி, வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வினோத்குமார் நாட்டறம் பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நாட்டறம் பள்ளி போலீசார் மாசிலா மணியை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்து தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டில் எடுத்து வந்து போலீஸ் நிலையம் முன்பு தனது உடல் மீது ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டது
- சிகிச்சைக்கு பின் சம்பந்தப்பட்ட பகுதியில் விடப்படும்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரில் பல நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டது.
பின்னர், பெட் கேர் அமைப்பின் சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு 150 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
இதில் நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார், சுகாதார அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் அனைத்தும் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டு உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் அவை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- யானைக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பதால் அந்த யானையை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒற்றை கொம்பன் என அழைத்து வருகின்றனர்.
- யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யானையின் கால் வீக்கமாக உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனச்சரகத்தில் உள்ள காவலூர் நாயக்கனூர் கிராம பகுதியில் ஒற்றை யானை சுற்றி திரிகிறது.
இந்த யானைக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பதால் அந்த யானையை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒற்றை கொம்பன் என அழைத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை கொம்பன் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது.
இந்த யானையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யானையின் கால் வீக்கமாக உள்ளது.
யானை நடக்க முடியாமல் அவதிப்படுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் யானையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவற்றுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். காலில் காயத்துடன் சுற்றிவரும் ஒற்றை கொம்பன் யானைக்கு உரிய சிகிச்சை அளித்து அதை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர்டவுன் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த பாமக மாவட்டத் துணைச் செயலாளர் அப்புனு என்கிற ஏகாம்பரம் (54) இவரது மருமகன் புல் என்கிற ஜெயக்குமார் (வயது 35) இவர் கோழி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கந்திலி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் அழைத்து 6 மாதங்களுக்கு எந்த குற்ற நடவடிக்கையும் ஈடுபடக்கூ டாது என்று அவர்களை கோட்டாட்சியர் முன்பு நிறுத்தி எழுதி வாங்கி க்கொண்டு அனுப்புவது வழக்கமாக உள்ளது.
இந்நிலை யில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புல் என்கிற ஜெயக்கு மாரை கந்திலி போலீசார் அழைத்துச் சென்று 110 சட்டத்தில் வழக்கு பதிந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் நேற்று கந்திலி போலீசார் புல் என்கின்ற ஜெயக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் அப்புனு என்கிற ஏகாம்பரம் அவரது மகள் கைக் குழந்தையுடன் கந்திலி போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பெட்ரோல் பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து தரையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனையில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து பெட்ரோல் கேனை பறித்து திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் அப்புனு மற்றும் அவரது மகளை சமாதானம் செய்து டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்கள் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கொண்டகினந்தப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குண்டு கொல்லை பகுதியில் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குண்டு கொல்லை பகுதியில் சாலையோரத்தில் சுமார் 100 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் சுடுகாடு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2006 ஆண்டு தனிநபர் ஒருவர் சுடுகாட்டு இடத்திற்கு பட்டா வாங்கி உள்ளார். இது சம்பந்தமாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பட்டா பெற்றவர் கோர்ட்டு வழக்கு நிலுவையில் உள்ள போது தனது உறவினரின் பொக்லைன் எந்திரம் மூலம் சுடுகாடு இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது புதைக்கப்பட்ட இடத்தில் எலும்பு கூடுகள் வெளியே வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் சுத்தம் செய்கிறாய் என கேட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். இதனால் அப்பகுதி பொது மக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர்.
இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.






