என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் தரையில் அமர்ந்து போராட்டம்
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர்டவுன் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த பாமக மாவட்டத் துணைச் செயலாளர் அப்புனு என்கிற ஏகாம்பரம் (54) இவரது மருமகன் புல் என்கிற ஜெயக்குமார் (வயது 35) இவர் கோழி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கந்திலி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் அழைத்து 6 மாதங்களுக்கு எந்த குற்ற நடவடிக்கையும் ஈடுபடக்கூ டாது என்று அவர்களை கோட்டாட்சியர் முன்பு நிறுத்தி எழுதி வாங்கி க்கொண்டு அனுப்புவது வழக்கமாக உள்ளது.
இந்நிலை யில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புல் என்கிற ஜெயக்கு மாரை கந்திலி போலீசார் அழைத்துச் சென்று 110 சட்டத்தில் வழக்கு பதிந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் நேற்று கந்திலி போலீசார் புல் என்கின்ற ஜெயக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் அப்புனு என்கிற ஏகாம்பரம் அவரது மகள் கைக் குழந்தையுடன் கந்திலி போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பெட்ரோல் பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து தரையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனையில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து பெட்ரோல் கேனை பறித்து திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் அப்புனு மற்றும் அவரது மகளை சமாதானம் செய்து டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






