என் மலர்
நீங்கள் தேடியது "2 women arrested"
கூடலூர்:
கூடலூர் தெற்கு போலீசார் கேஸ் குடோன் ஓடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பெண்களை மடக்கிபிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் கூடலூரை சேர்ந்த ஜெயமணி(63), காந்திமாலா(40) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
- 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
- தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் கலைசெல்வி ( வயது 24). கோவை அரசு கலை கல்லூரியில் பி.எச்.டி படித்து வருகிறார். இவர் சிங்காநல்லூரில் இருந்து அரசு பஸ்சில் தனது தாயாருடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மகளிர் பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கலைசெல்வி தனது பேக்கில் இருந்த மணிபர்சை எடுக்க முயன்றார். ஆனால் பர்சை காணவில்லை. பஸ்சில் வரும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ திருடி சென்று விட்டனர். அதில், 2 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ. 84,450 பணம் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் மீண்டும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர்களை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த 2 பெண்களும் பஸ்சில் கலைசெல்வியின் மணிபர்சை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை விதியை சேர்ந்த லட்சுமி(40), சித்ரா(30) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ. 84,450 பறிமுதல் செய்தனர். பின்னர் லட்சுமி மற்றும் சித்ராவை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை தொண்டா முத்தூர் சேரன் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60).
இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சரஸ்வதி வேலைக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார்.
பின்னர் அவர் ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 2¼ பவுன் தங்க நகையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
யாரோ பஸ் வந்த போது திருடி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து சரஸ்வதி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
- திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி:
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா நடமட்டம் இருப்பதாகவும், இளைஞர்கள், மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ராம்ஜி நகர் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கள்ளிக்குடி மார்க்கெட் அருகாமையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துராமன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில், ராம்ஜி நகர் பிள்ளையார் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மோகன் (32) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்தும் 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் போலீசார் ராம்ஜி நகர் காட்டூர் தண்ணீர் தொட்டி அருகாமையில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்களை கைது செய்தனர்.
விசாரணையில் கைதானவர்கள் ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கவிதா (42), ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த நந்தினி (48)என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராம்ஜிநகர் போலீசார் பிராட்டியூர் முதல் ராம்ஜிநகர் வரை பகல், இரவு நேரங்களில் ரோந்து பணி சென்று இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுத்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.
- மதுரையில் கஞ்சா, மது பாட்டிலுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
மதுரை
மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனை பேரில், கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று மாலை வாழைத்தோப்பு சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.
பெண்கள் கைது
அப்போது அந்த வழியாக வந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில், அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 4 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 2 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சிந்தாமணி முத்துராமலிங்கம் மனைவி விஜயலட்சுமி (வயது 40), வாழைத்தோப்பு முத்து மனைவி சாந்தி (42) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்றதாக மேற்கண்ட 2 பெண்களையும் கீரைத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையில் சேலை திருடிய 2 பெண்களை கைது செய்தனர்.
- சிசிடிவி கேமரா பதிவை வைத்து நடவடிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவ மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது நண்பரும் சேர்ந்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கடையை இவரது மனைவி மேனகா மற்றும் பணியாளர்கள் சிலரும் ஜவுளி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 5 பேர் சேர்ந்து கடைக்கு வந்தனர். அவர்கள் அதிகமான சேலையை பார்த்து, கடைசியில் ஒரு சேலை மட்டும் வாங்கிச் சென்றனர். பின்னர் கடை பணியாளர்கள் சேலைகளை எடுத்து அடுக்கும் போது சில சேலைகள் காணவில்லை. இது குறித்து கடை உரிமையாளரிடம், விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக உரிமையாளர், சிசிடிவி கேமரா பதிவை பார்த்து அதில் சிலர் சேர்ந்து துணிகளை எடுத்து மறைத்து செல்வது அறிந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கல்லாத்தூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சம்மாள் (வயது 35), ரமேஷ் மனைவி கல்பனா (40) ஆகியோரை கைது செய்தும் மற்றவர்களை தேடியும் விசாரணை செய்து வருகின்றனர்.காணாமல் போன துணிகளின் மதிப்பு ரூ. 6 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பஜார் வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- ரூ. 40,000/- மதிப்பிலான ஹான்ஸ் விமல் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வெள்ளிமேடு பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார் மற்றும் போலீசார் பஜார் வீதி தரணி என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை பஜார் வீதியை சேர்ந்த சரவணன் மனைவி ஸ்ரீபிரியா, தரணி ஆகி யோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் ரூ. 40,000/- மதிப்பிலான ஹான்ஸ் விமல் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கண்ட எதிரிகள் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியின் பெட்டி க்கடையை வெள்ளிமேடு பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.