என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "150 நாய்களுக்கு கருத்தடை"

    • சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டது
    • சிகிச்சைக்கு பின் சம்பந்தப்பட்ட பகுதியில் விடப்படும்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரில் பல நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டது.

    பின்னர், பெட் கேர் அமைப்பின் சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு 150 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    இதில் நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார், சுகாதார அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் அனைத்தும் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டு உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் அவை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×