என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
    • காப்புகாட்டு பகுதியில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை மான் ஒன்று தவறி விழுந்துவிட்டது.

    மானை மீட்க உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மானை எந்த வித காயமின்றி உயிருடன் மீட்டனர்.

    மான் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நந்திபென்டா செட்டேரி டேம் அருகே உள்ள காப்புகாட்டு பகுதியில் விடப்பட்டது. அப்போது மான் துள்ளி குதித்து காட்டிற்குள் சென்றது.

    • வாணியம்பாடி வெப்பாலம்பட்டி கிராமத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஒன்றியம் பெரியகுரும்பத் தெரு ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பாலம்பட்டி கிராமத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தியின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டி.ஆர். செந்தில் வழிகாட்டுதலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி தலைமையில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மக்களுக்கு கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை தடுக்க தண்ணீர் மற்றும் பிற திரவங்களை குடிக்க மக்களுக்கு நலக்கல்வி வழங்கப்பட்டது.

    உடன் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் ரவி மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரசாந்த் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணகுமார் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் ஓ.ஆர். எஸ் கரைசல் வழங்கப்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களால் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பகல் நேரங்களில் வெயில் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது.

    இந்த கடும் வெயிலையும் பொருப்படுத்தாமல் திருப்பத்தூர் மாவட்ட போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மோர், பழச்சாறு, தண்ணீர் மற்றும் காகித கூழால் செய்யப்பட்ட பிரத்யேக தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், போக்குவரத்து காவலர்களின் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் 'கூலிங் கிளாஸ்' மற்றும் நிழல் தரும் குடை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் டவுன் டிஎஸ்பி செந்தில் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி டிராபிக் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வரவேற்றார்.

    மாவட்ட எஸ்பி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி 39 போக்குவரத்து காவலர்களுக்கு கருப்பு கண்ணாடி, நிழல் தரும் பெரிய அளவிலான குடைகளை வழங்கி பேசினார்.

    பின்னர் கிருஷ்ணகிரி வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி (ஆயுதப்படை) அருண்குமார் (போக்குவரத்து) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் சின்ன மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் புகழேந்தி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியாளர்களுக்கு கோடை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், ஒன்றியகுழு கவுன்சிலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கே.கோபி, குமரேசன், சந்தோஷ், ஊராட்சி செயலாளர் சின்னதம்பி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மக்கள்நல பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் கடும் அவதி
    • புதிய பஸ்கள் விட வேண்டும் என வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஏலகிரி மலை நிலாவூர் நோக்கி அரசு பஸ் சென்றது.

    இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    10-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பஸ் பழுதாகி வளைவில் நின்றது.

    அப்போது டிரைவர் கிழே இறங்கி பார்த்த போது டயர் பஞ்சர் ஆனது தெரிய வந்தது இதனையெடுத்து அரசு பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் ஏலகிரி மலை நோக்கி நடந்து சென்றனர். சில பயணிகள் லிப்ட் கேட்டு சென்றனர்.

    இது குறித்து சுற்றுலா பயணி கூறியதாவது :-

    ஏலகிரி மலை பகுதிக்கு புதிய பஸ்கள் இயக்க வேண்டும் பெரும்பாலும் பழைய பஸ்கள் ஏலகிரி மலைக்கு சென்று வருவதால் அடிக்கடி பஸ்கள் பழுதாகி பாதி வழியில் நின்று விடுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி பொது தேர்வு முடிந்து கோடைகால விடுமுறை விடப்படு வதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் பயணிகள் கவரும் வகையில் புதிய பஸ்கள் விட வேண்டும் என்றனர்.

    • மின் மோட்டாரை சரி செய்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    சின்ன கந்திலி ஒன்றியம் கண்ணாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 67), ஓய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது கிணற்றில் இறங்கி மோட் டாரை சரி செய்ய முயன்ற போது கால் தவறி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உள்ளார்.

    நேற்று காலை வீட் டில் பன்னீர்செல்வம் இல்லா ததை கண்டு வீட்டில் உள்ள வர்கள் தேடி பார்த்தனர். அப் போது அவர் கிணற்றில் விழுந்து உள்ளது தெரிய வந்தது.

    உடன டியாக இதுகுறித்து தீயணைப் புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து கந்திலி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    • பொதுமக்களுக்கு அன்னதானம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் கிராமம் லாலா பேட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் உள்ள பொன்னியம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி சரவணன், பி.குமார் ஏ.பிரபு, ஜி.பிரகாசம், பொன்னியம்மன் கோயில் பூசாரி கவுரவம் தலைமையில் நடைபெற்றது.

    ஊர் பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை மேல தாளங்களுடன் பொன்னியம்மன் கோவி லுக்கு எடுத்துவரப்பட்டு சாமி அலங்கரிக்கப்பட்டு பின்னர் சாமி பின்புறம் உள்ள வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் மஞ்சள் குங்குமம் மூலம் மரத்தில் அம்மன் சாமி வரையப்பட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், யாக வேள்வி, தம்பதியர் சங்கல்பம், நடைபெற்றது.

    தொடர்ந்து பலவித மூலிகையால் யாகம் குண்டம் வளர்க்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பூசாரி தாலி கட்டி பொதுமக்கள் சாமியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மிட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தன.

    • தண்டவாளத்தை கடக்கும் போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் துறையேறி மேல் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 35) கட்டிட தொழிலாளி.

    நேற்று காலை தினகரன் கேத்தாண்டப்பட்டி வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சோமலாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது59). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறையில் அடைப்பு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அத்தனாவூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரிசா மாநிலம் ரசூல்புரி பகுதியைச் சேர்ந்தவர் சேக் பரூக் (வயது 25). இவர் ஏலகிரி மலையில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

    மற்றொருவர் ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் தெருவை சேர்ந்த தருண் (24) என தெரிய வந்தது.

    பின்னர் இவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • சோதனையில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் லோகேஷ் உமராபாத் போலீசாரிடம் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வெங்கட சமுத்திரம் கூட்டு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    இமானுவேல் (60) என்பவர் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தது தெரிந்தது. பின்னர் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்பட்ட தொழிற்ச்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம்.
    • விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலின்பேரில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    இதில் தொழிற்சாலையில் இருந்து ரூ.10 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.

    இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், தீ விபத்தில் உருக்குலைந்த ஊதுவத்தி கம்பெனியில் வேலூர் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில், வானில் இருந்து நெருப்பு பிழம்பாக வந்த எரிகற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை உறுதி செய்தனர்.

    மேலும், அந்த கம்பெனியில் இருந்து எரிகற்கள் சிலவற்றையும் மீட்டனர். இவற்றை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் கூறும்போது, ''வானில் இருந்து எரி கல் தீப்பிழம்பாக எரிந்து வந்து விழுந்தை சுற்று வட்டார பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.

    அவர்களின் நேரடி சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். சுமார் 3 கி.மீ சுற்றுவட்டாரத்தில் எரிகற்கள் விழுந்த தாக்கம் தெரிந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட தொழிற்ச்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம்.

    முதற்கட்ட ஆய்வில் அவை எரி கல் என்று உறுதியானாலும், அவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, சேகரிக்கப்பட்ட எரிகற்களை சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளோம். நாட்றம்பள்ளி அருகே ஏற்கெனவே இரண்டு முறை எரிகற்கள் விழுந்துள்ளன.

    தனியார் கல்லூரியில் விழுந்த எரிகற்களால் பயங்கர சேதம் ஏற்பட்டது. கல்லூரி வாகனங்கள், கண்ணாடிகள் நொறுங்கின.

    ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது. தற்போது 3-வது முறையாக எரி கற்கள் விழுந்துள்ளது என்றனர்.

    ×