என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் மீண்டும் அரசு பஸ் திடீர் பழுது
    X

    ஏலகிரி மலையில் மீண்டும் அரசு பஸ் திடீர் பழுது

    • சுற்றுலா பயணிகள் கடும் அவதி
    • புதிய பஸ்கள் விட வேண்டும் என வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஏலகிரி மலை நிலாவூர் நோக்கி அரசு பஸ் சென்றது.

    இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    10-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பஸ் பழுதாகி வளைவில் நின்றது.

    அப்போது டிரைவர் கிழே இறங்கி பார்த்த போது டயர் பஞ்சர் ஆனது தெரிய வந்தது இதனையெடுத்து அரசு பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் ஏலகிரி மலை நோக்கி நடந்து சென்றனர். சில பயணிகள் லிப்ட் கேட்டு சென்றனர்.

    இது குறித்து சுற்றுலா பயணி கூறியதாவது :-

    ஏலகிரி மலை பகுதிக்கு புதிய பஸ்கள் இயக்க வேண்டும் பெரும்பாலும் பழைய பஸ்கள் ஏலகிரி மலைக்கு சென்று வருவதால் அடிக்கடி பஸ்கள் பழுதாகி பாதி வழியில் நின்று விடுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி பொது தேர்வு முடிந்து கோடைகால விடுமுறை விடப்படு வதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் பயணிகள் கவரும் வகையில் புதிய பஸ்கள் விட வேண்டும் என்றனர்.

    Next Story
    ×