என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A cooling glass for the police"

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களால் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பகல் நேரங்களில் வெயில் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது.

    இந்த கடும் வெயிலையும் பொருப்படுத்தாமல் திருப்பத்தூர் மாவட்ட போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மோர், பழச்சாறு, தண்ணீர் மற்றும் காகித கூழால் செய்யப்பட்ட பிரத்யேக தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், போக்குவரத்து காவலர்களின் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் 'கூலிங் கிளாஸ்' மற்றும் நிழல் தரும் குடை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் டவுன் டிஎஸ்பி செந்தில் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி டிராபிக் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வரவேற்றார்.

    மாவட்ட எஸ்பி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி 39 போக்குவரத்து காவலர்களுக்கு கருப்பு கண்ணாடி, நிழல் தரும் பெரிய அளவிலான குடைகளை வழங்கி பேசினார்.

    பின்னர் கிருஷ்ணகிரி வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி (ஆயுதப்படை) அருண்குமார் (போக்குவரத்து) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×