என் மலர்
நீங்கள் தேடியது "A fallen deer"
- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
- காப்புகாட்டு பகுதியில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை மான் ஒன்று தவறி விழுந்துவிட்டது.
மானை மீட்க உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மானை எந்த வித காயமின்றி உயிருடன் மீட்டனர்.
மான் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நந்திபென்டா செட்டேரி டேம் அருகே உள்ள காப்புகாட்டு பகுதியில் விடப்பட்டது. அப்போது மான் துள்ளி குதித்து காட்டிற்குள் சென்றது.






