என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர் சாவு
- மின் மோட்டாரை சரி செய்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
சின்ன கந்திலி ஒன்றியம் கண்ணாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 67), ஓய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது கிணற்றில் இறங்கி மோட் டாரை சரி செய்ய முயன்ற போது கால் தவறி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உள்ளார்.
நேற்று காலை வீட் டில் பன்னீர்செல்வம் இல்லா ததை கண்டு வீட்டில் உள்ள வர்கள் தேடி பார்த்தனர். அப் போது அவர் கிணற்றில் விழுந்து உள்ளது தெரிய வந்தது.
உடன டியாக இதுகுறித்து தீயணைப் புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கந்திலி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story