என் மலர்
திருப்பத்தூர்
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- 3 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள மாஞ்செடிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன். பார்வையிட்டார்
திருப்பத்தூர்:
கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்ட நானோ யூரியா உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலமாக பயிர்களுக்கு தெளிக்கும் முறையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 22 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலத்தை விலை நிலமாக மாற்றப்பட்டு, வேளாண் பொறியியல் துறையின் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைகப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சொட்டுநீர் பாசனம் அமைத்து 3 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள மாஞ்செடிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன். பார்வையிட்டார்கள்.
இதில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர். சித்ராதேவி, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, துணை இயக்குநர் பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருஇராமச்சந்திரன், உதவி இயக்குநர்கள் இராகினி, அப்துல்ரஹமான், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் டி.ஐ.ஜி. அதிரடி உத்தரவு
- லாரியை வழி மடக்கி டிரைவரை தள்ளிவிட்டு ஆந்திரவுக்கு லாரியை கடத்தி சென்றனர்
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரை சேர்ந்தவர் முரளி. இவருக்கு சொந்தமான லாரி கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கு ஸ்பேர் பார்ட்ஸ் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றது.
வெலக்கல்நத்தம் அருகே லாரி வந்த போது, டாடா சுமோவில் வந்த 6 பேர் கும்பல் லாரியை வழி மடக்கி டிரைவரை தள்ளிவிட்டு ஆந்திரவுக்கு லாரியை கடத்தி சென்றனர்.
இதனையடுத்து லாரி உரிமையாளர் முரளி நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த காமராஜ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாகவேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஜார்தான்கொல்லை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரை கைது செய்தனர்
அப்போது ராஜசேகரன் கடத்திய லாரியை உடைத்து விற்று விட்டதாகவும் அதற்கு உண்டான பணத்தை தான் செலுத்தி விடுவதாகவும் கூறினார் பின்னர் போலீஸ் நிலையத் தில் வைத்து ரூ.12 லட்சம் கொடுப்பதாக உறுதிய ளித்து முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தார்.
அந்த பணத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீஷ் நிலையத்தில்வைத் திருந்ததாக தெரிகிறது மேலும் தொடர்ந்து மீதம் உள்ள பணத்தை கொடுக்க போலீசார் வற்புறுத்தியதை அடுத்து ராஜ சேகரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விரைந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சோதனை செய்து கணக்கில் வராத 7 லட்சத்தை கைப்பற்றி கையும், களவுமாக பிடித்தனர்.
அதில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து சஸ்பெண்ட்டு செய்யப்படடனர்.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், தற்போது வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்ஸ்பெக்டர் காம ராஜ், சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் 4 போலீசார் உட்பட 6 பேரை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
அதில் நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணிபுரித்து வந்த இன்ஸ்பெக்டர் காமராஜ். சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக்காவலர் நாசர் (தற்போது ஆலங்காயம் போலீஷ் நிலையத்தில் பணியாற்றுகிறார்) கார்த்திக் (வாணியம்பாடி நகர போலீஸ் நிலையம்), அறிவு செல்வம் (வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம்), ரகுராம் (ஜோலார்பேட்டை டவுன் போலீஸ் நிலையம்) ஆகிய போலீசார் உட்பட 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
- ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ்.கே.ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40).
நகை கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று நேற்று காலை தனது கழுத்தை தனக்கு தானே அறுத்து கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
- திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் 104 டிகிரி சுட்டெரிக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசி மழை வரும் சூழல் ஏற்பட்டது அப்போது பல்வேறு பகுதிகளில் இடி இடித்தது.
திருப்பத்தூர் அருகே உள்ள அச்சமங்கலம் கிராமத்தில் அன்பு என்பவரது ஓட்டு வீட்டில் திடீரென இடி தாக்கியது.இதில் மின்மீட்டர் பற்றி எரிந்து உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இருந்த போதிலும் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் உள்ள அனைவரும் அவரது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
- ஆங்கிலம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று குழந்தைகளை மூங்கில் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார்
- ஏலகிரி மலை போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 135-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் குழந்தைகள் வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் எபினேசர் மற்றும் ஜீவா என்ற ஆசிரியை இருவரும் பாடம் கற்பித்து வந்துள்ளனர்.
ஜீவா என்ற ஆசிரியை ஆங்கிலம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று குழந்தைகளை மூங்கில் குச்சியில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் குழந்தைகளை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதன் எதிரொலியாக மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார அலுவலர்கள் ரமணன், வேணுகோபால், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் அப்பள்ளியில் பரபரப்பு நிலவியது. ஆசிரியர்கள் எபினேசர், ஜீவா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
- மஜ்ருலூம் கல்லூரியில் 10 ஆயிரம் பேரும் உமராபாத் மசூதிகளில் 2 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றனர்
- மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் மஜ்ருலூம் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆயிரம் பேரும் துத்தி பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் 20 ஆயிரம் பேரும் மஜ்ருலூம் கல்லூரியில் 10 ஆயிரம் பேரும் உமராபாத் மசூதிகளில் 2 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றனர். பேர் பெரியாங்குப்பம் மின்னூர் சோலூர் மாதனூர் அருங்கல்துருகம் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.
இதேபோல திருவண்ணாமலை, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், கண்ண மங்கலம், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
- வரித் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்
- நகராட்சி ஆணையர் தகவல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பொது மக்கள் தங்களது சொத்து வரி 2023-2024 முதல் அரையாண்டு சொத்து வரித் தொகையை வருகிற 30 ஆம்தேதிக்குள்ளும் மற்றும் 2023-2024 இரண்டாம் அரையாண்டு சொத்து வரித் தொகையை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள்ளும் சொத்து வரி செலுத்தும் வரிவிதிப்புதாரர்களுக்கு, செலுத்தும் வரித் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
- தனித்தனி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும்
- போலீஸ் அதிகாரிகள் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 135 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆசிரியைகள் பணி புரிந்து வருகின்றனர்.
நேற்று மூன்றாம் வகுப்பு மாணவ-மாணவிகளை, ஆசிரியை ஆங்கில பாடத்தில் தேர்வு எழுத வைத்துள்ளார்.
இதனை சரியாக எழுத வில்லை எனக்கூறி பள்ளிக் குழந்தைகளை மூங்கில் கம்பால் கால், தலையில் சர மாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. வலி தாங்கமுடியா மல் மாணவ - மாணவிகள் அலறி துடித்துள்ளனர்.
மாலையில் பள்ளி முடித்ததும் வீட்டிற்குச் சென்ற மாணவ- மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோர்க ளிடம் கூறி அழுதுள்ளனர். தலையிலும், கால்களிலும் காயங்களைப் பார்த்த பெற் றோர்கள், உடனடியாக அவர்களை ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச் சைக்காக அனுமதித்துள்ள னர்.
10-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளை தாக் கியதாககூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சசி ரேகா, புவிநிலா, தமிழரசன், விசாலினி, பூவரசன் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து பெற்றோர்கள் உடனடியாக ஏலகிரிமலை போலீஸ் நிலையத்திற்கு தக வல் தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-
குழந்தைகளை அடித்த ஆசி ரியை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஆசிரியையிடம் போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
- எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிகாரம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்தது. இதனை ஒட்டி திருப்ப த்தூர் நகர அ.தி.மு.க. சார்பி ல் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார்.
முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என். திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தொகுதி செயலாளர் கே.எம். சுப்பிரமணியம் வரவேற்றார்.
இதில் அவைத் தலைவர் ஜி. ரங்கநாதன், துணைச் செயலாளர் ஆனந்தன், தம்பா கிருஷ்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரா.ரமேஷ், சந்திரமோகன், நகராட்சி கவுன்சிலர் சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூரை சேர்ந்தவர்
- சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
மும்பை ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது போதை யில் பயணம் செய்த முதியவர் ஒருவர் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த னர், அதன்பேரில் அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சேலம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வர மூர்த்தி மற்றும் போலீசார், ரெயில் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அந்த பெட்டியில் இருந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த முதியவர் வேலூர் காந்தி நகர் பகு தியைச் சேர்ந்த பாபு (வயது 64) என தெரிய வந்தது.
சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், முதியவரை ஜோலார் பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக் டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 300 பேர் பயணடைந்தனர்
- நகராட்சி தலைவர் வழங்கினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சி 6,வது வார்டு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 300 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி இஸ்மாயில் பேட்டை பகுதியில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் சபீனா ரசாக் தலைமை தாங்கினார், அனைவரையும் ரசாக் வரவேற்றார், 300, ஏழை குடும்பங்களுக்கு ரூ,4.5 லட்சம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை திமுக நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், வழங்கி பேசினார்கள், நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் சவுத் அகமத், சீத்திக், ஹனிபா அல்லாஹ் பகத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 5 கடைகளில் 30 கிலோ பறிமுதல்
- ரூ.2500 அபராதம்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கேசவன் தலைமையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சுமார் 5 கடைகளில் 30 கிலோ அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்க ப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறியதாவது:-
ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திடீர் சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு ரூ.2500 அபராதம் விதிக்க ப்பட்டது.
மேலும் சில கடைகளுக்கு பிளாஸ்டிக்களை விற்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.
மீண்டும் சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் துணை தலைவர் திருமால் ஊராட்சி செயலாளர் பாண்டியன், மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.






