search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 30-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை
    X

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 30-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

    • வரித் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்
    • நகராட்சி ஆணையர் தகவல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பொது மக்கள் தங்களது சொத்து வரி 2023-2024 முதல் அரையாண்டு சொத்து வரித் தொகையை வருகிற 30 ஆம்தேதிக்குள்ளும் மற்றும் 2023-2024 இரண்டாம் அரையாண்டு சொத்து வரித் தொகையை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள்ளும் சொத்து வரி செலுத்தும் வரிவிதிப்புதாரர்களுக்கு, செலுத்தும் வரித் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×