என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அரசுமர தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் இவரது மகன் அனுமுத்து (வயது 35).

    இவர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணம் ஆன பிறகு அனுமுத்து மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அனுமுத்து தனது மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு புதுப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த வாரம் அனுமுத்து தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்தவர்களை மடக்கி பிடித்தனர்
    • கார், பைக், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் வாணியம்பாடி குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு நாட்றம்பள்ளி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 47), பெருமாள் பேட்டையை சேர்ந்த ரவீந்திரன் (34) என்பதும் இவர்கள் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக், ரொக்க பணம் ரூ.2 ஆயிரம், 2 கிராம் தாலி, 2 வெள்ளி வேல் மற்றும் பித்தளை மணி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் கைது செய்யப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வனத்துறையினர் மீட்டனர்
    • வனத்துறையினர் மீட்டனர் பல லட்சம் மதிப்புடையது

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கம்பிெகால்லை 7-வது தெருவில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆம்பூர் வனத்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி (விவசாயி) என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் பல லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பு வைத்து இருந்தது. வனத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை மீட்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்
    • 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் அதே பகுதியில் கடந்த 3 வருடங்களாக நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையில் வட மாநிலத்தினர் உள்ளிட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நார் தொழிற்சாலை திடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது இதனால் உரிமையாளர் உடனடியாக நாட்ட றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 1.45 மணியளவில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    அதன் பிறகு திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலை 5 மணி வரை தொடர்ந்து 3.15 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனால் நார் தொழிற்சாலை இருந்த நார் மற்றும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    இரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து இருக்கலாம் என கோணத்தில் நாட்ட றம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டதால் தொழிலாளிகள் வேலை செய்ய வில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி என்பவரது மாந்தோப்பில் காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகுந்தன. 5 பெரிய யானை 2 குட்டி யானைகள் என அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டுபகுதியில் அட்டகாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள கதவாலம் ஊராட்சி சேர்ந்த அப்துல் சலீம் (வயது 45) கூலி தொழிலாளி.

    இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    சிகிச்சை பெற்று வந்த அவர் அதிகாலை இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் மற்றும் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் பகுதியில் கள்ள சாராயம் மற்றும் வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த தென்னரசு (வயது 37) என்பவரை கைது செய்தனர்.

    இதனையடுத்து தென்னரசு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • 195 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடந்தது
    • நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவது அவசியம்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்குட் பட்ட பொதுமக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினிடேங் போன்றவற்றின் மூலமாகவும், ஜல்ஜீவன் திட்டத் தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமை வட் டார வளர்ச்சி அலுவலர் நா.விநாயகம் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் திருமால், பயிற்சியின் அவசியம், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவ தன் அவசியம் பற்றியும் பேசினார்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைப்பி ரியா, மஞ்சுநாதன், ராஜா ஆகியோர், பம்ப் ஆபரேட்டர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வார்டு உறுப்பினர் ஆகியோ ருக்கு பயிற்சி அளித்து கையேடு வழங்கினர். முடிவில்வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு நன்றி கூறினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராமக் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 பேர் வீதம் 39 ஊராட்சிகளுக்கு 195 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

    • வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்தல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யத்திலிருந்து, காட்பாடி, ஆம் பூர். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் மல் லானூர் வரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவுதுணைபோ லீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக் டர் வனிதா, சப்-இன்ஸ்பெக் டர் முத்தீஸ்வரன், செந்தில் உள்ளிட்ட போலீசார் நேற்று ரெயில்களிலும், ரெயில் நிலை யங்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது ஜோலார்பேட் டையை அடுத்த பச்சூர் ரெயில்நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக 15 மூட்டை களில் பதுக்கிவைத்திருந்த 750 கிலோரேஷன் அரிசியை பறி முதல் செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி டேக்கன் வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்ன பாப்பா (வயது 70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை அதிகமான வயிற்று வலி காரணமாக வீட் டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந் துள்ளார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினர், சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் குணசேகர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
    • ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

    திருப்பத்தூர்:

    தமிழக அரசு 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேடால் எலி மருந்து விற்பனையை தடை செய்துள்ளது.

    இதுகுறித்துமாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 'ரேடால்' எலிமருந்தானது மாளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்,மருந்து கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே 'ரேடால்' மருந்து விற்க கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    'ரேடால்' மருந்து விற்பனை செய்வதுதெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தடை செய்யப்பட்டுள்ள 'ரேடால்' எலி மருந்தை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    இது குறித்து திருப்பத்தூர் - 95009 -01367, கந்திலி 63820-09282, ஜோலார்பேட்டை 99941-27177, நாட்றாம்பள்ளி 86678-85729, ஆலங்காயம் 93617-91499, மாதனூர் 94899-23724 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மேடை அமைக்கும் பணி ஆய்வு
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் வருகிறார்.

    கொடியேற்றுதல், அரசு கட்டிடங்கள் திறந்து வைத்தல், பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனால் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலவாடி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கப்படவுள்ளது.

    இந்த இடத்தினை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு விழா மேடை அமைக்கும் பகுதி மற்றும் பொதுமக்கள் அமரும் இருக்கைகள், வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர்கள் சிவப்பிரகாசம், குமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம. அன்பழகன், மதிய ஒன்றிய செயலாளர் க. உமாகன்ரங்கம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×