என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • அமுலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன் வழங்கினார்

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், கோபாலபுரம் மற்றும் சுண்ணாம்புப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றின் ஏரிக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்.

    வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்கும் வசதி இன்றி கடும் அவதி அடைந்தனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வீடுகளை இழந்த 252 பேருக்கும், 2-ம் கட்டமாக 57 பேருக்கும் ராமாலை ஊராட்சியில் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து தற்போது 3-ம் கட்டமாக பங்கரிஷிகுப்பம் பகுதியில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டது. இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

    தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். துணைதாசில்தார் சுபிச்சந்தர் அனைவரையும் வரவேற்றார்.

    குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பா ளராக குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்துகொண்டு 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். முடிவில் வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர் நன்றி கூறினார்.

    • பத்திரம், சான்றிதழ்கள் எரிப்பு
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு ஊராட்சி கண்ட கள்ளவூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), லாரி கிளீனர்.

    இவரது மனைவி நாச்சி (35). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராம சாமி, அவரது மகன் முருகன் (40) என்பவருக்கும் வரப்பு தகராறு ஏற்பட்டதில் ராம சாமி காயமடைந்து திருப்பத் தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகி றார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாளை போலீ சார் தாலுகா போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி பெருமாள் மற்றும் அவரது மனைவி நாச்சி கடந்த 30-ந்தேதி வீட்டை பூட் டிக்கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளனர்.

    பின்னர் அங்கு அவரது உறவினர் பெருமாள் என்பவர் விட்டில் தங்கி விட்டு, போலீசாக தேர்வு பெற்று வேலூரில் பயிற்சியில் உள்ள மகளை பார்க்க நேற்று வேலூர் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் இவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக பெருமாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த வீடு மற்றும் நில பத்திரங்கள், மகள், மகன் பள்ளி சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து திருப் பத்தூர் தாலுகா போலீசில் பெருமாள் உறவினர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோ தம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு யாராவது செய்தார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் உமராபாத் ஊராட்சி பஸ் நிலையத்தில் ரியாஸ் (வயது 45) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உமராபாத் போலீசார் கடையில் சோதனை செய்தபோது ஹான்ஸ், குட்கா பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பார்சனா பள்ளி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 30). இவர் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கோட்ட பொறு ப்பாளர் தீனதயாளன், ரவி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் கலந்துகொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ், நந்தனம் பொறியியல் கல்லூரி தாளாளர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நந்திபெண்டா நந்திராயன் கோவில் சிலைகள் சேதமடைந்துள்ளது.

    அதனை சீர் செய்ய வேண்டும். ராஜராஜ சோழன் பிறந்த நாளை அரசே கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள கோவில் குளம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இந்து முன்னணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த, குடியானகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான நிலத்தில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.

    அந்த வீட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அனுமந்தனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனுமந்தன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
    • கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    வாணியம்பாடி பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜோலார்பேட்டை பகுதியில் புதிய பயணிகள் நிழற்கூடம் திறந்து வைத்தல், திருப்பத்தூரில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது.

    இதில் அனைவரும் உற்சாகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.சம்பத்குமார், டி.கே.மோகன், சாந்திசீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், ம. அன்பழகன், எஸ். சாரதி குமார், ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கவிதா தண்டபாணி, க. உமா கன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அரசுமர தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் இவரது மகன் அனுமுத்து (வயது 35).

    இவர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணம் ஆன பிறகு அனுமுத்து மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அனுமுத்து தனது மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு புதுப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த வாரம் அனுமுத்து தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்தவர்களை மடக்கி பிடித்தனர்
    • கார், பைக், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் வாணியம்பாடி குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு நாட்றம்பள்ளி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 47), பெருமாள் பேட்டையை சேர்ந்த ரவீந்திரன் (34) என்பதும் இவர்கள் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக், ரொக்க பணம் ரூ.2 ஆயிரம், 2 கிராம் தாலி, 2 வெள்ளி வேல் மற்றும் பித்தளை மணி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் கைது செய்யப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வனத்துறையினர் மீட்டனர்
    • வனத்துறையினர் மீட்டனர் பல லட்சம் மதிப்புடையது

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கம்பிெகால்லை 7-வது தெருவில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆம்பூர் வனத்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி (விவசாயி) என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் பல லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பு வைத்து இருந்தது. வனத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை மீட்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்
    • 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் அதே பகுதியில் கடந்த 3 வருடங்களாக நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையில் வட மாநிலத்தினர் உள்ளிட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நார் தொழிற்சாலை திடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது இதனால் உரிமையாளர் உடனடியாக நாட்ட றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 1.45 மணியளவில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    அதன் பிறகு திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலை 5 மணி வரை தொடர்ந்து 3.15 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனால் நார் தொழிற்சாலை இருந்த நார் மற்றும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    இரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து இருக்கலாம் என கோணத்தில் நாட்ட றம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டதால் தொழிலாளிகள் வேலை செய்ய வில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி என்பவரது மாந்தோப்பில் காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகுந்தன. 5 பெரிய யானை 2 குட்டி யானைகள் என அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டுபகுதியில் அட்டகாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×