குளிர்பானத்தில் மாத்திரை கலந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதுஜெயிலில் அடைத்தனர்
குளிர்பானத்தில் மாத்திரை கலந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்
Published on

குடியாத்தம்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை ஹாசாபி நகரை சேர்ந்தவர் ஆசிப் (வயது 28) பேக்கரி உரிமையாளர்.

இவருக்கும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ஆசிப் குடியாத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பேக்கரி கடை நடத்தி வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கு யாரும் இல்லாத சமயத்தில், ரோஸ்மில்கில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார் சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிப்பை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com