என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம், பம்புசெட் உள்ளது.

    பழுதடைந்து காணப்பட்ட பம்புசெட்டை அகற்றிவிட்டு, கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாச்சல் பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண் கள் உள்பட 5 பேரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநி லத்தை சேர்ந்த 43 வயது பெண், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், ஆம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது.

    இவர்களை வைத்து விபசார தொழில் செய்தது ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் தீபக் (வயது 20) மற்றும் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி மேனகா (29), ராதிகா, ராகுல் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக் மற்றும் மேனகா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராதிகா, ராகுல் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனநலம் பாதிக்கப்பட்டவர்
    • அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    ஜோலார்பேட்டை:

    தர்மபுரி மாவட்டம் மாடஹல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    குடும்ப தகராறு காரணமாக கடந்த வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    லட்சுமணன் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுய நினைவு மாறி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

    கடந்த 3-ந் தேதி பவுர்ணமி என்பதால் லட்சுமணனுக்கு சுயநினைவு மாறி ஈரோட்டில் இருந்து ஏதோ ஒரு ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பி லட்சுமணன் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

    இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. பின்னர் 4-ந் தேதி காலை தண்டவாளத்தின் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தவரை ரெயில்வே போலீசார் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்
    • புதியதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியை சோதனை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட கே.பந்தாரப்பள்ளி, மல்லபள்ளி மற்றும் பணியாண்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி மற்றும் சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உடன் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 28). நடன கச்சேரி குழு வில் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண் பர்களுடன் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப் பணை அருகே உள்ள கனகநாச்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் கோவில் அரு கில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்ற அவர் நீரில் மூழ்கிவிட்டார்.

    அவரை குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையி னர் இணைந்து இரவு 7 மணி வரையில் தேடியும் கிடைக்க வில்லை. மேலும் இருட்டிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டனர்.

    மீண்டும் நேற்று காலை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பகல் 12 மணி அளவில் முரளி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்
    • போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே 2 மனைவிகளை தவிக்க விட்டு கணவன் மாயமானது தொடர்பாக இருதரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் அடுத்த பழைய மின்னூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23), கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (21).

    தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்னூர் பகுதியை சேர்ந்த சுவேதா என்பவரை 2-வதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதே சமயத்தில் சுவேதாவின் உறவினர்கள் பெண்ணை காணவில்லை என ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர்.

    இதற்கிடையில் தாமோதரன் மற்றும் சுவேத ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாலுகா போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் 2 பேரின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தாமோதரன் தனது 2 மனைவிகளையும் விட்டுவிட்டு திடீரென தலைமறைவாகிவிட்டார்.

    நேற்று இரவு தாமோதரன் வீட்டுக்கு வந்த சுவேதாவின் உறவினர்கள், உன் மகன் எங்கே என கேட்டு தாமோதரனின் தாய் மலரை சரமாரியாக தாக்கினர்.

    அதனைப் பார்த்த மலரின் உறவினர்கள் எதிர் தரப்பினரை தாக்கியதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மலர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கு மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
    • போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 13) அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சூரிய பிரகாஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டது இதற்காக நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபி என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். அப்போது கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    வீட்டிற்கு சென்றதும் சிறுவன் சூரிய பிரகாசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இதனால் சிறுவனின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது கோபிநாத் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் கோபிநாத்தை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் போலி கிளினிக் நடத்துவது குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை அவரது மனைவி, தந்தை ஆகியோர் கொலை செய்தனர்.
    • சசிகுமார் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (40). தம்பதியினருக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

    சசிகுமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று சசிகுமார் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது மாமனார் சுப்பிரமணி (70) உதவியுடன், சசிகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    இது குறித்த தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி மற்றும் சுப்பிர மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நடவடிக்கை எடுப்பதாக உறுதி
    • அண்ணன் வாங்கிய நகையை வாங்கி தர வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ராதிகா (வயது 45). இவரது அண்ணன் சந்திரசேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது 30 பவுன் நகையை அண்ணன் சந்திரசேகரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    வாங்கிய நகையை நீண்ட நாட்களாக சந்திர சேகர் திருப்பித்தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதிகா உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ராதிகா தனது உடலில் பெட்ரோலை ஊற் றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ராதிகா மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ராதிகாவிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முன்னாள் அமைச்சர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில், அவரது தனி உதவியாளர் பிரகா சம்மற்றும் விக்னேஷ், ராஜ்குமார், கவிதா பிரகாசம் ஆகியோர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி திருப்பத்தூரை அடுத்த ஓமக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி தேவன் என்பவரிடம் ரூ.16 லட்சம் பெற்றுள்ளனர்.

    ஆனால் அரசு வேலை வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜானிடம், தேவன் மற்றும் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற் றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • செடிகளை போலீசார் பிடிங்கி அழித்தனர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகேநாச் சியார் குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயியைபோலீசார் கைது செய்தனர்

    கஞ்சா செடி வளர்ப்பு

    திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 62) விவசாயி. இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு வருகிறார். இந்த வாழைத் தோப்பு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந் தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜனின் வாழைத் தோப்பிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாழை தோப் பின் நடுவில் ராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந் தது. உடனடியாக கஞ்சா செடிகளை பிடிங்கி போலீசார் அழித்த னர். இதன் எடை 2½ கிலோ ஆகும்.

    இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    குடியாத்தம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை ஹாசாபி நகரை சேர்ந்தவர் ஆசிப் (வயது 28) பேக்கரி உரிமையாளர்.

    இவருக்கும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு ஆசிப் குடியாத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பேக்கரி கடை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கு யாரும் இல்லாத சமயத்தில், ரோஸ்மில்கில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார் சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

    நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிப்பை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    ×