என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பணையில் மூழ்கிய டான்ஸ் மாஸ்டர் பிணமாக மீட்பு
- தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 28). நடன கச்சேரி குழு வில் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண் பர்களுடன் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப் பணை அருகே உள்ள கனகநாச்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் கோவில் அரு கில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்ற அவர் நீரில் மூழ்கிவிட்டார்.
அவரை குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையி னர் இணைந்து இரவு 7 மணி வரையில் தேடியும் கிடைக்க வில்லை. மேலும் இருட்டிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டனர்.
மீண்டும் நேற்று காலை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பகல் 12 மணி அளவில் முரளி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.






