search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை
    X

    தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை

    • மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
    • ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

    திருப்பத்தூர்:

    தமிழக அரசு 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேடால் எலி மருந்து விற்பனையை தடை செய்துள்ளது.

    இதுகுறித்துமாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 'ரேடால்' எலிமருந்தானது மாளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்,மருந்து கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே 'ரேடால்' மருந்து விற்க கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    'ரேடால்' மருந்து விற்பனை செய்வதுதெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தடை செய்யப்பட்டுள்ள 'ரேடால்' எலி மருந்தை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    இது குறித்து திருப்பத்தூர் - 95009 -01367, கந்திலி 63820-09282, ஜோலார்பேட்டை 99941-27177, நாட்றாம்பள்ளி 86678-85729, ஆலங்காயம் 93617-91499, மாதனூர் 94899-23724 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×