என் மலர்
உள்ளூர் செய்திகள்

நார் தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்த காட்சி.
நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
- தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்
- 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் அதே பகுதியில் கடந்த 3 வருடங்களாக நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்த தொழிற்சாலையில் வட மாநிலத்தினர் உள்ளிட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நார் தொழிற்சாலை திடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது இதனால் உரிமையாளர் உடனடியாக நாட்ட றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 1.45 மணியளவில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
அதன் பிறகு திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலை 5 மணி வரை தொடர்ந்து 3.15 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் நார் தொழிற்சாலை இருந்த நார் மற்றும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து இருக்கலாம் என கோணத்தில் நாட்ட றம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டதால் தொழிலாளிகள் வேலை செய்ய வில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






