என் மலர்
திருப்பத்தூர்
- சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்
- ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த 1980 முதல் 1989 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரெயில்வே இருபாலர் தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
34 வருடங்களுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட நபர்கள் அனைவரும் சந்தித்து தங்கள் சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் அனைவரும் சந்தித்து அனைவரின் சந்தோஷ- துக்கங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
விளையாட்டுகளை விளையாடி மலரும் நினைவுகளால் சந்தோஷத்தை கழித்து விடைபெற்றுச் சென்றனர்.
- உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த வெப்பாளமரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி.
இவருக்கு கடந்த 2 வருடங்க ளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் திடீரென பூச்சி மருந்தை (விஷம் )குடித்து மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட குடும்பத்தினர் மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் அவதி
- ஏலகிரி மலையில் பலத்த மழை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையின் காரணமாக ஏலகிரி மலையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தத திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பாறைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- தீயணைப்பு துறையினருக்கு தகவல்
- திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த மண்டல நாயனகுண்டா பகுதியில் வசித்து வரும் குணவதி என்பவரின் வீட்டின் அருகே நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே நாயனசெருவு பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் வீட்டின் அருகே 5 அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பு இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்
- போலீசார் கைது செய்து விசாரணை
ஆலங்காயம்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(28) என்பவர் தனது பைக்கை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பணம் வாங்கினார். சாந்தகுமார் நீண்ட நாட்கள் ஆகியும் பைக்கை திரும்ப மீட்கவில்லை.
இந்த நிலையில் சசிகுமார் நியு டவுன் பகுதியில் உள்ள சாந்தகுமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சாந்தகுமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சசிகுமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வலி தாங்க முடியாமல் சசிகுமார் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணி யம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து சசிகுமார் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர்.
- சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்
- பக்தர்கள் பரவசம் அடைந்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது.
2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்த போதும், கொடி மரத்தில் ஏற்றப்பட்ட விளக்கு அணையவில்லை.
மேலும் விளக்கில் மழைநீர் நிரம்பி எண்ணெய்யுடன் கலந்து தொடர்ந்து விளக்கு அணையாமல் எரிவதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மேலும் அந்த கிராம மக்கள் சாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்.
- கடைக்காரர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்
- ஆற்றங்கரையில் கொண்டு விடப்பட்டது
ஆலங்காயம்:
வாணியம்பாடி கச்சேரி சாலையில் சக்தி (வயது 30), என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்டு அதிச்சடைந்த சக்தி கூச்சலிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்.
இதனைப் பார்த்த பக்கத்துக் கடைக்காரர்கள், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாம்பு பிடிக்கும் நபர் விரைந்து சென்று, கடைக்குள் பதுங்கியிருந்த மஞ்சள் நிற சாரை பாம்பை பிடித்து ஆற்றங்கரையில் கொண்டு சென்று விட்டார்.
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சின்னகுலமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 43). எலக்ட்ரீசியன். இவருக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ந் தேதி மாதவன் வேலை தொடர்பாக மோட் டார்சைக்கிளில் திருப்பத்தூ ரில் இருந்து திருவண்ணா மலை செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வெங்கடேஸ் வரா நகர் அருகே சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதையடுத்து மாதவன் நாய் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து, அவர் சாலையில் விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே வீட்டிற்கு நுழைய முயன்ற 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியில் வசித்து வரும் பெருமாள் இவரது மகன் ஆனந்த் என்பவரது வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றது ஆனந்த் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டின் வரண்டாவில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருப்பதை கண்டனர். பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு உயிருடன் பிடித்தனர். திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- விவசாய நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புகாளை வட்டம், வடக்குப்பாட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முரளி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, முரளியை கடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
- உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பம் - சோலூர் இடையே அமைந்துள்ள 2 தடுப்பணைகளில் மண்ணை கொட்டி, மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, நீர்வழிப்பாதையை மூடி, அப்பகுதி வழியாக கல்குவாரிக்கு வாகனங்கள் செல்வதற்காக மண் சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் மண்சாலை அமைத்த தனிநபரை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாசில்தார் குமாரி நீர்வழிப்பாதை யையும், 2 தடுப்பணை களையும் மண் போட்டு மூடி சாலை அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தடுப்பணைகளில் கொட்ட ப்பட்ட மண்ணையும், நீர்வழி ப்பாதையை மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் அகற்ற உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பகுதியில் எம்.எல்.ஏ செந்தில்குமார் தலைமையிலும், கிழக்கு ஒன்றியம் பகுதியில் முன்னாள் எம்.எல். ஏ கோவி. செந்தில்குமார் தலைமையிலும், உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூராட்சி செயலாளர் சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பணியாற்றுவது குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன், கோவிந்தசாமி, சங்கர் உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






