பணத்தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் போலீசார் கைது செய்து விசாரணை
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆலங்காயம்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(28) என்பவர் தனது பைக்கை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பணம் வாங்கினார். சாந்தகுமார் நீண்ட நாட்கள் ஆகியும் பைக்கை திரும்ப மீட்கவில்லை.

இந்த நிலையில் சசிகுமார் நியு டவுன் பகுதியில் உள்ள சாந்தகுமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சாந்தகுமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சசிகுமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வலி தாங்க முடியாமல் சசிகுமார் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணி யம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து சசிகுமார் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com