என் மலர்
நீங்கள் தேடியது "வீரர் மாயம்"
- கண்டுபிடித்து தருமாறு மனைவி கலெக்டரிடம் மனு
- ஆம்பூரில் இருந்து பணிக்குச் சென்றார்
ஆம்பூர்:
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் அசாம் மாநிலத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவருடைய மனைவி கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






