என் மலர்
திருநெல்வேலி
- ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் நவ்வலடி பஞ்சாயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- இதில் பெருவாரியான மக்கள் தங்களின் அடையாள அட்டையை கொடுத்து தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
திசையன்விளை:
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் நவ்வலடி பஞ்சாயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ராதாபுரம் தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தாமரை பாரதி மற்றும் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெருவாரியான மக்கள் தங்களின் அடையாள அட்டையை கொடுத்து தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சரவணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, தகவல் தொழில்நுட்ப அணி ராதாபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கெனிஸ்டன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, நவ்வலடி கிளை செயலாளர் தில்லை ராஜா, நவ்வலடி சரவணகுமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலசுப்ரமணியம், ராதாபுரம் அரவிந்தன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ராம் கிஷோர் பாண்டியன், லிங்கதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், பொற்கிழி நடராஜன், குமார், ஸ்டாலின், பிரின்ஸ், டென்னிஸ், முத்தையா, வடிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கூடங்குளம் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக சாரண, சாரணியர் படை மாவட்ட செயலர் பால்துரை கலந்துகொண்டு கிண்டர் கார்டன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக சாரண, சாரணியர் படை மாவட்ட செயலர் பால்துரை கலந்துகொண்டு கிண்டர் கார்டன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசி னார். நிகழ்ச்சியில் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் செல்வராணி, ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் மழலையர் பிரிவு தலைவர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
- பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைபெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்றதும் ஆகும். இத்திருத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு. தினமும் பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 5-ம் திருநாள் அன்று கருடசேவைவயும், 7ம் திருநாள் அன்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.
இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணெய்காப்பும் நடைபெற்றது. தொடா்ந்து மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதன் பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்தடைந்தது.
- சுபாஷ் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார்.
- தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள ஒத்தக்கடை, நடுத்தெருவை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது41). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுபாஷ் (29) என்பவர் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார். ஆனால் தினேஷ் ராஜா செல்ல மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று சுபாஷ், அவரது நண்பர் ராகவேந்திர சர்மா (28), சண்முகபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தளபதி சமுத்திரம் பிளசண்ட் நகரை சேர்ந்த ஆலன் (22) ஆகியோர் லோடு ஆட்டோவில் வந்து, தினேஷ்ராஜாவை கம்பால் சரமாரியாக தாக்கி னர். இதுபோல தினேஷ் ராஜாவும், அவரது மனைவி தங்கபழமும் சேர்ந்து சுபாஷையும், ராகவேந்திர சர்மாவையும் கம்பால் தாக்கினர். இந்த மோதலில் தினேஷ்ராஜா, சுபாஷ், ராக வேந்திரசர்மா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதில் தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையிலும், சுபாஷ், ராகவேந்திர சர்மா நெல்லை அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இதையடுத்து ஏர்வாடி போலீசார் இரு தரப்பை சேர்ந்த தினேஷ்ராஜா, அவரது மனைவி தங்கபழம், சுபாஷ், ராகவேந்திர சர்மா, விக்னேஷ், ஆலன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குலதெய்வ வழிபாடு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாஸ்தாவுக்கு மாலைசாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்காக வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக முந்தைய நாளே பக்தர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.
அதன்படி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று காலை முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இந்நிலையில் பக்தர்கள் இன்று அங்குள்ள ஆற்றில் புனித நீராடி, பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
மேலும் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன், பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ஆரியங்காவு சாஸ்தா கோவில், சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் அனைத்தலையூர் தென்னூர் அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.
இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
பங்குனி உத்திர நட்சத்திரம் நேற்று தொடங்கி இன்று வரை நடக்கிறது. நேற்று பல கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி-கல்லூரிகளும் இன்று செயல்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.
இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் இன்று கார்-வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.
- ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
- ஒரு பூத்திற்கு 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரம சிவன், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செய லாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பெரிய பெருமாள், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத் துரை, வக்கீல் ஜெனி, சண்முககுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒரு பூத்திற்கு 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம்பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும். நெல்லை மாவட்ட மாநகரத்தில் பழு தடைந்துள்ள சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.
- வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
- நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு தினமும் வருகிறது. இங்கிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்வார்கள்.
பூக்கள் விலை உயர்வு
வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று சந்திப்பு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்து ரூ. 800-க்கு விற்கப்பட்டது.
அதே போல் அரளிப்பூ நேற்று ரூ. 150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரு. 50 உயர்ந்து ரூ. 200-க்கு விற்பனையானது. சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.200-க்கும் விற்பனையானது. எனினும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
- மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
- டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது
நெல்லை:
மகாவீர் ஜெயந்தியை யொட்டி நெல்லை மாநகர பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இறைச்சி கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இறைச்சி விற்பனை
இதையடுத்து மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சில கடைகளில் முன்பக்க வாசலை மூடிவிட்டு சட்ட விரோதமாக பின்பக்க வாசல் வழியாக இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கமிஷன ருக்கு புகார் சென்றது.
அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பினாயில் ஊற்றி அழிப்பு
அப்போது டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சுகாதார அலுவலர் இளங்கோ பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.
- நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
- பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞானசம்பந்த ரால் பாடல் பெற்ற தலமாகவும் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
பங்குனி உத்திர திருவிழா
அதன் ஒரு நிகழ்ச்சியாக பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா ஆண்டு தோறும் 10 நாட்கள் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி சுவாமி சன்னதி உள் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்ககொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் இருக்கும் உடையவா் லிங்கம் வெளி வந்து காட்சி கொடுப்பதும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதும் இந்த திருவிழாவில்தான்.
செங்கோல் வழங்கும் வைபவம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வைபவம் இன்று இரவு காந்திமதி அம்பாள் கோவிலில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாநகரம் உருவானதும், சிவபெருமான் தன் சாா்பாக இந்த நகரத்தை ஆட்சி செய்யும் பொருட்டு தங்க செங்கோலும், வெள்ளி திருப்பாதுகையும் தன் மகனான முருகனிடம் கொடுத்து அதை பாண்டிய மன்னாிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவிளையாடல் ஆகும்.
அதன்படி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் சிறப்பு அலங்கா ரத்தில் வீற்றிருக்க பக்கத்தில் முருகப்பெருமானும், பாண்டிய மன்னனும் வணங்கி நிற்பார்கள். தொடா்ந்து கோவில் நிர்வாக அலுவலருக்கு செங்கோலும், உதவி ஆணையருக்கு சுவாமியின் திருப்பாதமும் வழங்கப்படும்.
இதனை நிர்வாக அலுவலர் தலைமையில் சுமந்து சுவாமி, அம்பாளை வலம் வந்து, பின்னர் தங்களிடம் வழங்கப்பட்ட பொறுப்பை திரும்ப சுவாமியிடமே ஓப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிறைவாக சுவாமி- அம்பாளுக்கு சோடச உபசரனைகள், நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தாிசனம் செய்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- போட்டியில் பரதம் மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போன்ற நடனங்களும் ஆடலாம்.
- நெல்லை மாவட்டத்தின் மாண்பினை வெளிப் படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம்.
நெல்லை:
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக பல்வேறு போட்டிகளும், நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன .
அவற்றுள் ஒன்றாக பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம், கிராமிய நடனம் போட்டிகள்) வருகிற 9-ந் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பரதம் மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் . மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. தமிழ் பாடல்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
இப்போட்டியில் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை மட்டுமே நடனமாட அனுமதிக்கப்படும். நெல்லை மாவட்டத்தின் மாண்பினை வெளிப் படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். இப்போட்டி 5 வயது முதல் 10 வயது வரை ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 15 வயது வரை இரண்டாம் பிரிவாகவும், 16 வயது முதல் 20 வயது வரை மூன்றாவது பிரிவாகவும் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவுகளில் இருந்து சிறந்த மூன்று நபர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் 9047817614 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தங்களது பெயர்களை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- விழாவிற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
- நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது. ரஞ்சிதம் வரவேற்று பேசினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஓராண்டு கால கல்லூரி பணிகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், தனது கனவு கல்லூரியான மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாகிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். ஆண்டுவிழா நிகழ்ச்சியை வடிவமைத்த முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளையும் பாராட்டினார் .
விழாவில் நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் தனது சிறப்புரையில், மாணவிகள் எதையும் மற்றவர்களைப் பார்த்து செய்யாமல் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் சிந்தனையுடன் இக்கல்லூரி மாணவிகளை போல செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர் கல்லூரியின் இணையதளத்தை (www.mascedu.org) நிறுவனத் தலைவர் லாரன்ஸ் மாணவி களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்த்துறை உதவி பேராசிரியர் யா. லலிதா எழுதிய "கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவம்" என்னும் நூலை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெளியிட ,கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பெற்றுக் கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியார்கள் மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட மத்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 60 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் அமைக்கப்பட்டு தொடர்ச்சி யாக மாணவ-மாணவிகள் மத்தியில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
அதன்தொடர்ச்சியாக பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் வரவேற்றார்.
மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு சம்பந்தமாக நடந்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்ட ஆற்றல் மன்ற ஆய்வு அதிகாரியான பொது பிரிவு செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் வெங்கடேஷ் மணி மாணவ-மாணவி களுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் மாணவர்களுக்கு அவர்கள் வீடுகளில் விதிக்கப்பட்ட கடந்த மின் கட்டணத் தொகைக்கும், அடுத்து விதிக்கப்படும் கட்டண தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு தங்கள் முன்னெடுத்த மின் சிக்கனத்தை அறிந்து கொள்ள அறிவுரை வழங்கி னார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜன் மற்றும் அன்பு ஸ்டார்லின், ஆற்றல் மன்ற குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர்.






