என் மலர்
நீங்கள் தேடியது "நடன போட்டி"
- போட்டியில் பரதம் மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போன்ற நடனங்களும் ஆடலாம்.
- நெல்லை மாவட்டத்தின் மாண்பினை வெளிப் படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம்.
நெல்லை:
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக பல்வேறு போட்டிகளும், நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன .
அவற்றுள் ஒன்றாக பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம், கிராமிய நடனம் போட்டிகள்) வருகிற 9-ந் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பரதம் மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் . மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. தமிழ் பாடல்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
இப்போட்டியில் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை மட்டுமே நடனமாட அனுமதிக்கப்படும். நெல்லை மாவட்டத்தின் மாண்பினை வெளிப் படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். இப்போட்டி 5 வயது முதல் 10 வயது வரை ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 15 வயது வரை இரண்டாம் பிரிவாகவும், 16 வயது முதல் 20 வயது வரை மூன்றாவது பிரிவாகவும் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவுகளில் இருந்து சிறந்த மூன்று நபர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் 9047817614 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தங்களது பெயர்களை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.
- பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
நாகர்கோவில் :
தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு கல்வி அமைச்ச கத்தின் மூலம் "கலா உத்சவ் " என்ற கலைப் பண்பாட்டுத் திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்த ப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில் நாகர்கோவில், சுங்கா ன்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். சேல த்தில் நடைபெற்ற மாநில அளவிலான பரத நாட்டியப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்றார்.
மாநில அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நடுவர்கள் பவானி. தனசுந்தரி மற்றும் ஸ்ரீமஜா ஆகியோர் முன்னிலையில் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.
மாநில போட்டியில் வென்றதன் மூலம் ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெறும் தேசிய அள விலான போட்டியில் தமி ழ்நாடு பள்ளிக் கல்வித்து றை சார்பில் அதிதி சந்திர சேகர் பங்கேற்க உள்ளார்.சாதனை படைத்த மாணவி அதிதி சந்திரசேகரை பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.






