search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் மரியா பெண்கள்  கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா
    X

    மரியா கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்ற போது எடுத்தபடம்.

    வள்ளியூரில் மரியா பெண்கள் கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா

    • விழாவிற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
    • நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது. ரஞ்சிதம் வரவேற்று பேசினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஓராண்டு கால கல்லூரி பணிகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், தனது கனவு கல்லூரியான மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாகிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். ஆண்டுவிழா நிகழ்ச்சியை வடிவமைத்த முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளையும் பாராட்டினார் .

    விழாவில் நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் தனது சிறப்புரையில், மாணவிகள் எதையும் மற்றவர்களைப் பார்த்து செய்யாமல் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் சிந்தனையுடன் இக்கல்லூரி மாணவிகளை போல செயல்பட வேண்டும் என்றார்.

    பின்னர் கல்லூரியின் இணையதளத்தை (www.mascedu.org) நிறுவனத் தலைவர் லாரன்ஸ் மாணவி களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் யா. லலிதா எழுதிய "கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவம்" என்னும் நூலை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெளியிட ,கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பெற்றுக் கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியார்கள் மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Next Story
    ×