என் மலர்
திருநெல்வேலி
- பாளையங்கால்வாய் மூலம் 3 ஆயிரத்து 844 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பழவூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் பாளையங்கால்வாய் 42.46 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த கால்வாய் மூலம் நேரடியாகவும், அதனுடன் இணைந்துள்ள 57 குளங்கள் வாயிலாகவும் 3 ஆயிரத்து 844 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பொதுமக்கள் புகார்
வருடாந்திர பராமரிப்பு பணி என நிதி ஒதுக்கி இந்த கால்வாயை நெல்லை மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பராமரித்து வருகிறது. எனினும் பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில், குறிப்பாக மேலப்பாளை யம் பகுதியில் உள்ள பாளை யங்கால்வாயை அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. அந்த கால்வா யில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல தேவையான நீரோட்டமின்றி பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர்
மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுவதால் கழிவுநீர் கால்வாய் போல் காட்சி அளிக்கிறது. குப்பைகள், கட்டிடக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கால்வாய் அழியும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் தொன்மையான பளையங்கால்வாய் பாழாகி வருவதாகவும், இதனை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
மீண்டும் திறப்பு
விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறை யாததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 14-ந்தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவி க்கப்பட்டது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தூய்மைப்பணி
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. சேதமடைந்த மேற் கூரைகள், சுவர் பூச்சுகள் சரிசெய்யப்பட்டு உள்ளது.
அறிவுறுத்தல்
முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும். பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற இலவச நலத்திட்ட பொருட்களை மாண வர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
தொடக்க நாளிலேயே பாடங்களை நடத்தாமல், மாணவர்களின் விடுமுறை நிகழ்வுகள் பற்றி கேட்டறிதல் போன்ற உளவியல் சார்ந்த செயல் பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகரிப்பு
இதற்கிடையே நாளை பள்ளிகள் திறப்பையொட்டி மாநகர் மற்றும் மாவட்டங்களில் ஸ்டேஷனரி கடைகளில் நோட்டு, புத்தகங்கள், கையேடுகள், பென்சில், பேனா, காலனி, சீருடை உள்ளிட்டவைகள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் மாடல்களில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதுதவிர பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்ல புதிதாக பேக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
மாநகர பகுதியில் பெரும்பாலான கடைகளில் பேக்குகள் பல்வேறு மாடல்களில் குழந்தைகளை கவரும் வகையில் தொங்கவிடப் பட்டிருந்தன. அவற்றை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர். டவுனில் பெற்றோர்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்றதால் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
- தற்போது வீடுகள் தோறும் இறைச்சி சாப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.
- கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை ரூ. 220 வரை விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
தற்போதைய கால சூழ்நிலையில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அசைவ உணவுகள்
வீட்டில் அந்த உணவுகளை சமைத்தாலும், விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து வீட்டிற்கே வரவழைத்து உண்ணுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விடுமுறை நாட்கள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் மட்டுமே பொதுமக்கள் அசைவம் சாப்பிட்டு வந்த நிலை மாறி தற்போது வீடுகள் தோறும் இறைச்சி சாப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.
நெல்லையில் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழி இறைச்சியை தான் அதிகம் பேர் விரும்பி வாங்கி சமைக்கின்றனர். கடந்த வாரம் வரை 1 கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ. 200 முதல் ரூ. 220 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பிராய்லர் கோழி விலை கடு மையாக அதிகரித்து ள்ளது.
திடீர் உயர்வு
நேற்று ரூ. 260 ஆக இருந்த நிலையில், இன்று சந்திப்பு பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனையானது. எலும்பு இல்லா கோழி இறைச்சி ரூ. 350 வரையிலும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தச்சநல்லூர், பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் ஒருகிலோ ரூ. 280 வரையிலும் விற்கப்பட்டது.
- தாழையூத்து அருகே தெற்கு மலை பகுதியில் சிலர் மண் அள்ளுவதாக தாழையூத்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கோலீசாரை கண்டதும் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த 6 பேரும் தப்பியோட முயன்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே தெற்கு மலை பகுதியில் சிலர் மண் அள்ளுவதாக தாழையூத்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடி யாக சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
3 பேர் பிடிபட்டனர்
அவர்களை கண்டதும் அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த 6 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்த நிலையில் 3 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் தச்சநல்லூர் கரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த காளிராஜன்(வயது 34), கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி (24), சீவலப்பேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, மண் கடத்தலுக்கு பயன் படுத்திய 2 டிப்பர் லாரிகள், 1 ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய வேலு, பெருமாள், கனி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சுப்பையா ஆயநேரியில் உள்ள பூலம் பஞ்சாயத்திற்குட்பட்ட குடிநீரேற்றும் அறையின் மின் மோட்டாருக்கான வயரை திருடி சென்று விட்டார்.
- இதுபற்றி பஞ்சாயத்து தலைவி முத்துசெல்வி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பூலத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). இவர் பூலம் பஞ்சாயத்தில் மின் மோட்டார் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால், பூலம் பஞ்சாயத்து தலைவி முத்துசெல்வி அவரை பணியில் இருந்து நீக்கம் செய்தார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சுப்பையா ஆயநேரியில் உள்ள பூலம் பஞ்சாயத்திற்குட்பட்ட குடிநீரேற்றும் அறையின் மின் மோட்டாருக்கான வயரை திருடி சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுபற்றி பஞ்சாயத்து தலைவி முத்துசெல்வி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மின் வயர்களை திருடிய சுப்பையாவை தேடி வருகின்றனர்.
- கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது.
- இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது. மழை பெய்யாததால் அருவி-நீரோடைகள் வறண்டு வருகின்றன. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில் கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மள, மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது.
- நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
திசையன்விளை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதனை தொடங்கும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். கெனிஸ்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் மவுலின், இசக்கி பாபு, கோட்டை கருங்குளம் சொக்கலிங்கம், இடிந்தகரை சந்த்தியாகு, ராஜேஷ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், வேணுகோபால், காமில், நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் தினேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து சுஷாந்தை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த செபின் ராஜி(26), எட்வின் தாமஸ்(27) ஆகிய 2 பேரை மூணாறு பகுதியில் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர். நேற்று மதியம் கேரளாவில் இருந்து நெல்லைக்கு அவர்கள் 2 பேரையும் கொண்டு வந்தனர்.
பின்னர் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொள்ளை சம்பவத்தில் 8 பேர் வரையிலான கும்பல் ஈடுபட்டிருக்கலாம். அதில் தற்போது பிடிபட்டுள்ள 2 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர்கள் தங்கியிருந்த விடுதி அறை முழுவதும் தேடிப் பார்த்தும், பெரிய அளவில் பணம் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. அவர்களிடம் விசாரிக்கும்போது, சக கூட்டாளிகளிடம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால் தனிப்படை போலீசார் தொடர்ந்து கேரளாவிலேயே முகாமிட்டு மீதமுள்ள 6 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர்களுடைய கூட்டாளிகள் இருக்கும் இடத்தை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மாதம் தோறும் 3-வது சனிக்கிழமையில் பொது மக்களிடையே மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- சாலைகளில் தூய்மை பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
நெல்லை:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
விழிப்புணர்வு
மேலும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் மாதம் தோறும் 3-வது சனிக்கிழமையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களுக்கான தூய்மை இயக்கம் என்ற தலைப்பில் பொது மக்களிடையே மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த நாளில் நெல்லை மாநகராட்சியில் மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்து தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மேயர் சரவணன் தலை மையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மேயர் சரவணன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாலைகளில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ரசூல் மைதீன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலு வலர் இளங்கோ மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது.
- 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டில் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 315 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரு மான சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இதில் அரசு மருத்துவர் தினேஷ், வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விசாரணையின் போது 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது. 4 விபத்துகளிலும் இறந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மொத்தமாக ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், மூத்த வக்கீல்கள் திருமலையப்பன், மரிய குழந்தை, ராமேஸ்வரன், முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.
- குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அனுமதி இல்லாமல் சரள் மண் அள்ளியது சோதனையில் தெரிய வந்தது.
நெல்லை:
நாங்குநேரி அருகே குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இளந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரள் மண் ஏற்றிக் கொண்டு 3 டிராக்டர்கள் அந்த வழியாக சென்றது. அதனை போலீசார் சோதனை செய்த போது உரிய அனுமதி இல்லாமல் 3 யூனிட் சரள் மண் அள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து 3 டிராக்ட ர்களை பறிமுதல் செய்த போலீசார் மண் கடத்தியதாக கலுங்கடியை சேர்ந்த டக்ளஸ் சாமுவேல் (வயது 33), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அருணாச்சலம் (49), ஆழ்வாநேரியை சேர்ந்த பிச்சுராஜா (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் சூரங்குடி பகுதியில் உள்ள குளத்தில் சரள் மண் அள்ளியதும், அதை செங்கல் சூளைக்கு டிராக்டர்களில் கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
- மனக்காவலம்பிள்ளைநகரில் 17 தெருக்களில் செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
- அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பாக மின்வயர்களை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளைநகரில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 17 தெருக்களில் செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
தாழ்வாக செல்லும் மின்வயர்கள்
சாலையில் நின்றால் கைகளால் தொட்டுவிடும் உயரத்தில் மின்வயர்கள் செல்வதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே அசம்பாவித சம்ப வங்கள் நடைபெறும் முன்பாக மின்வயர்களை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மின்வ யர்களை உடனடியாக உயர்த்த க்கோரி நேற்று அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஒரு இடத்தில் சென்ற மின்வயர்களை உயர்த்தியும், மற்ற இடங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி சென்றதாக தெரி கிறது.
கோரிக்கை
இது குறித்து அப்பகுதியினர் கூறும்போது, மனக்கா வலம்பிள்ளைநகரில் சி.எஸ்.ஐ. தேவலாயம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்வ யர்கள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நேற்று ஒரு இடத்தில் மட்டும் மின்துறை அதிகாரிகள் வயர்களை சீரமை த்து சென்றுள்ளனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் வயர்கள் தாழ்வாக தான் செல்கிறது.
வாகனங்கள் செல்லும் போது வயர்களை உரசியபடி செல்கிறது. இதனால் அது அறுந்துவிழும் அபாயம் இருக்கிறது. எனவே உடனடி யாக தாழ்வாக செல்லும் வயர்களை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






