என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகர பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    தூய்மை பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை டவுனில் மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பலர் உள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மாதம் தோறும் 3-வது சனிக்கிழமையில் பொது மக்களிடையே மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • சாலைகளில் தூய்மை பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    விழிப்புணர்வு

    மேலும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் மாதம் தோறும் 3-வது சனிக்கிழமையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களுக்கான தூய்மை இயக்கம் என்ற தலைப்பில் பொது மக்களிடையே மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த நாளில் நெல்லை மாநகராட்சியில் மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்து தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று மேயர் சரவணன் தலை மையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மேயர் சரவணன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாலைகளில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ரசூல் மைதீன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலு வலர் இளங்கோ மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×