என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மனக்காவலம்பிள்ளைநகரில் தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அச்சம்
    X

    கைகளால் தொட்டுவிடும் தூரத்தில் மின்வயர்கள் செல்வதை சுட்டிக்காட்டும் பொதுமக்கள்.

    பாளை மனக்காவலம்பிள்ளைநகரில் தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அச்சம்

    • மனக்காவலம்பிள்ளைநகரில் 17 தெருக்களில் செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
    • அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பாக மின்வயர்களை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளைநகரில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 17 தெருக்களில் செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.

    தாழ்வாக செல்லும் மின்வயர்கள்

    சாலையில் நின்றால் கைகளால் தொட்டுவிடும் உயரத்தில் மின்வயர்கள் செல்வதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே அசம்பாவித சம்ப வங்கள் நடைபெறும் முன்பாக மின்வயர்களை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் மின்வ யர்களை உடனடியாக உயர்த்த க்கோரி நேற்று அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஒரு இடத்தில் சென்ற மின்வயர்களை உயர்த்தியும், மற்ற இடங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி சென்றதாக தெரி கிறது.

    கோரிக்கை

    இது குறித்து அப்பகுதியினர் கூறும்போது, மனக்கா வலம்பிள்ளைநகரில் சி.எஸ்.ஐ. தேவலாயம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்வ யர்கள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நேற்று ஒரு இடத்தில் மட்டும் மின்துறை அதிகாரிகள் வயர்களை சீரமை த்து சென்றுள்ளனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் வயர்கள் தாழ்வாக தான் செல்கிறது.

    வாகனங்கள் செல்லும் போது வயர்களை உரசியபடி செல்கிறது. இதனால் அது அறுந்துவிழும் அபாயம் இருக்கிறது. எனவே உடனடி யாக தாழ்வாக செல்லும் வயர்களை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×