என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ஸ்ரீரங்கம் மங்கம்மாள் நகர் பகுதியில் காலி மனை புதர்களில் விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது
    • ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் மங்க ம்மாள் நகர் மெயின் ரோட்டில் ஒன்றிரண்டு காலி மனைகள் உள்ளன.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இருக்கும் இந்த காலி மனைகள் மரம் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.மேலும் காலி மனைகளில் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை போட்டு செல்வ தால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது.மேலும் காலி மனைகளில் பாம்பு போன்ற விஷ ஜந்து க்களின் நடமாட்டம் உள்ள தால் மக்கள் அச்சமடை ந்துள்ளனர்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீனிவா சன் கூறும்போது,இந்த பகுதியில் சமீப காலமாக குரங்கு மற்றும் நாய் தொல்லை அதிகரித்து ள்ளது. மயில்கள் அதிக அளவு நடமாடுகின்றன. இவை சில நேரங்களில் விஷ ஜந்துக்களை பிடித்து குடியிருப்பு பகுதிகளில் போட்டு விட்டு செல்கிறது. காலி மனைகளில் மழை நீர் தேங்குவதால் கொசு தொல்லையும் அதிகரித்து ள்ளது.ஆகவே காலி மனைகளை சுத்தப்படுத்தி பொதுமக்க ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொ ள்கிறோம்.காலி மனைகளில் குப்பை போட்டு செல்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மனைகளை சுத்தமாக பராமரிக்க அதன் உரிமை யாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

    • திருச்சியில் ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்
    • தாறுமாறாக ஓடிய பஸ் கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு

    திருச்சி, 

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து புங்க னூர் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.இந்த பஸ்ஸை மணப்பா றை எம்ஜிஆர் நகர் பகுதி யைச் சேர்ந்த கணபதி (வயது 56) என்பவர் இயக்கி னார்.இதில் பத்துக்கும் மேற்ப ட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திருச்சி தலைமை தபால் நிலையம் தாண்டி அங்குள்ள ஆர்சி பள்ளி வேகத்தடை பகுதிக்கு வந்த போது டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.பின்னர் சாலையோரம் உள்ள தொலைபேசி கம்ப த்தை இடித்து க்கொண்டு அங்குள்ள கடைக்குள் புகு ந்தது. காலை நேரம் என்ப தால் அந்தக் கடைகள் பூட்ட ப்பட்டிருந்தது.அதேபோன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்கு காத்திருந்த பெண்களும் பஸ் தாறுமாறாக ஓடி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடி தப்பினர்.பஸ் விபத்தில் சிக்கிய சத்தம் கேட்டு அருகில் இரு ந்தவர்கள் ஓடி வந்து ஸ்டியரிங்கை பிடித்தபடி சாய்ந்து கிடந்த டிரைவரை மீட்டு திருச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாரு க்கும் காயம் ஏற்படவில்லை.சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் வேகத்த டையில் ஏறி இறங்கிய தனியார் பஸ் தாறுமாறாக ஓடி அங்குள்ள பெட்ரோல் பங்கில் புகுந்து விபத்து ஏற்படுத்தியது.இதில் அப்பகுதி ரயில்வே குடியிருப்பில் வசித்த ரயில்வே ஊழியர் சிக்கி பரிதாபமாக இறந்தார்.இந்தப் பகுதியில் அடி க்கடி விபத்து ஏற்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விபத்து பற்றிய தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி 53வது வார்டு கவுன்சிலர் ஜெ. கலைச்செல்வி விரை ந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.

    • திருச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன
    • மத்திய மாநில அரசுகள் உதவிட கோரிக்கை

    திருச்சி, 

    மத்திய அரசின் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக பெல் நிறுவனம் இருந்து வருகிறது.திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் நீராவி கொதிகலன்கள், அனல் மின் உற்பத்தி சாதனங்கள், காற்றாலை உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இதனை நம்பி திருவெறும்பூர், அரியமங்கலம், துவாக்குடி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன பொருளாதார தேக்கம், பெல் நிறுவனத்திற்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் குறைப்பு போன்ற காரணங்களால் அதனை சார்ந்து இயங்கி வந்த மேற்கண்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் 2016 ம் ஆண்டு முதல் நெருக்கடியை சந்திக்க தொடங்கின.இதனால் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.தற்போது இயங்கி வரும் நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

    வங்கிகளால் செயல்பட முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களாக இந்த நிறுவனங்களும் வாராக்கடன் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளிக்காத காரணத்தால் கூடுதல் வட்டிக்கு வங்கி சாராத நிறுவனங்களை அவர்கள் அணுகி மேலும் மேலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

    மறுபுறம் வங்கிகள் தங்களது கடனை வசூலிக்க சட்ட நடவடிக்கைகளையும் தீவிரப் படுத்தி உள்ளது. நிறுவனங்களை மூடி ஏலம் விடும் நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சிறு கூறு நிறுவனங்களுக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது ஆறுதலாக இருந்தாலும் நிரந்தர தீர்வாக அமையாது என தொழில் முனைவோர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து பெல் சிறு குறு தொழில் சங்க முன்னாள் தலைவரும், தமிழ்நாடு பாய்லர் அசோசியேசன் திருச்சி பிரிவு பொறுப்பாளருமான ராஜப்பா ராஜ்குமார் கூறும் போது, திருச்சியில்முன்பு 500 யூனிட்டுகள் 7 லட்சம் டன் உற்பத்தி என்ற நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இருந்தது 2016 ம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி குறைந்துவிட்டது. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.சிறு குறு நிறுவனங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் வங்கிகள் அதைக் கேட்பதாக இல்லை.

    பேரிடர் காலத்தில் மத்திய அரசு வழங்கிய நிவாரணத்தால் சில நிறுவனங்கள் மூச்சு விடும் நிலைக்கு வந்தன. இருந்த போதிலும் நலிவடைந்துள்ள நிறுவனங்களை மீட்டெடுக்கவும், புத்துயிர் அளிக்கவும், புனரமைக்கவும் நிவாரணம் மற்றும் கடனுதவிகள் அவசியமாகிறது.இதற்கு உடனடியாக 4சதவீத வட்டியில் புதிய கடன்களை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு உதவிகள் கிடைத்தால் மட்டுமே நலிவடைந்த சிறு குறு தொழில்களை மீட்டெடுத்து தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுக்க முடியும் என்றார்.

    • திருச்சியில் மின்சாரம் தாக்கி வன்னியர் சங்க நிர்வாகி பலியானார்
    • உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.கார்பெண்டர் வேலை செய்து வந்த குமார் மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறினார். அப்போது நிலை தடுமாறிய அவர் படிக்கட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு கைப்பிடியை பிடித்துள்ளார்.இதில் ஏற்கனவே மழையின் காரணமாக அந்த கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாமல் கைப்பிடியை பிடித்தவரால் அதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.வெகு நேரமாக கம்பியை பிடித்தபடியே குமார் நின்றதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் அவரை காப்பாத்த முயன்றா ர். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.பின்னர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் போலீஸ்காரரை, செல்போன் கடைக்காரர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • கண்டோன்மெண்ட் போலீசார் கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்

    திருச்சி,

    கடலூர் பண்ருட்டி மளிகை மேடு பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 26) இரண்டாம் நிலை காவலரான இவர் தற்போது திருச்சி ஐஜி அலுவலக அதி விரைவுப் படையிலசுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் அவரது செல்போன் பழுதடைந்தது. அதைத் தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் பழுது நீக்கும் கடையில் அதை சரி செய்ய கொடுத்தார்.அதற்கு கடைக்காரர் கூடுதல் தொகை கேட்டுள்ளனர்.அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் இவ்வளவு தொகை எதற்கு என கேள்வி எழுப்பிய போது கடைக்காரருக்கும் போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருச்சி கருமண்டபம் ஐ.ஓ.பி. நகர் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் சிராஜுதீன் (24) மற்றும் கடை ஊழியர் நூர்தீன் ஆகிய இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கெட்ட வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதீப் கண்ட்ரோல்மெண்ட் போலீசில் புகார் செய்தார. போலீசார் வழக்கு பதிவு செய்து சிராஜுதீனை கைது செய்தனர்.

    • திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதிரடி ஆய்வு

    திருச்சி,

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில்திருச்சிமாவட்டத்தில் மூன்று பெண்கள் உட்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..அனைவரும் நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப் குமார் திடீர் ஆய்வுமேற்கொண்டார்

    திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு வார்டு, ரத்தப்பரிசோதனை உபகரணங்கள், காய்ச்சல் வார்டுகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு செய்தார்.அப்போதுகாய்ச்சலுக்கு உண்டான ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தினார்.ஆய்வின் போது மருத்துவமனை டீன் நேரு மற்றும் பலர் உடன் இருந்தனர்

    • மண்ணச்சநல்லூர் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு

    திருச்சி,

    திருச்சி மணச்சநல்லூர் கரியமாணிக்கம் தழுதாள ப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடி வேல் (வயது 50). கூலித் தொழிலாளி.இவரது மகன் நவீன் குமார் ( 17). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் இன்ஜி னியரிங் கல்லூரியில் டிப்ள மோ மெக்கானிக்கல் இன்ஜி னியரிங் 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.பெற்றோர் சொற்ப வரு மானத்தை கொண்டு அவரி ன் கல்வி செலவுகளை சமா ளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர். அதைத்தொடர்ந்து நவீன் குமார் தனது கல்லூரி விடுமுறை நாட்களில் கட் டிட வேலைக்கு சென்று வந்தார்.அப்போது கொப்பவாளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும், நவீன் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காத லாக மாறியது.

    இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். படி க்க வேண்டிய காலத்தில் பாதை மாறினால் மகனின் எதிர்காலம் கேள்விக்கு றியாகி விடுமே என கவலை அடைந்தனர்.

    இதையடுத்து காதலை கைவிடுமாறு நவீன் குமாரை அவரது தந்தை வடிவேல் கண்டித்தார். ஆனால் காத லியை நொடிப் பொழுதில் அவரால் மறக்க இயல வில்லை.மேலும் காதலியை சந்தி க்கவும் இயலவில்லை. இதனால் மிகுந்த மன அழு த்தத்திற்கு ஆளான நவீன் குமார் தழுதாளப்பட்டி அய்யனார் கோவில் அருகா மையில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.இதுகுறித்து அவரது தந்தை வடிவேல் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர்.

    • மனைவியை மிரட்ட விளையாட்டாக தூக்கு மாட்டிய மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்
    • திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28) இவர் இரு சக்கரம் வாகனத்தை பழுது பார்க்கும் வேலை பார்த்து வருகிறார்.மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் மனைவி நிர்மலாவுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். உடனே மனைவியை மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்தில் வீட்டிற்கு வெளியே வந்த சைக்கிளை ஜெயக்குமார் வீட்டுக்குள் தூக்கி வந்தார். பின்னர் மின்விசிறிக்கு கீழே அந்த சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி மேலே ஏறி நின்று கழுத்தில் நைலான் கழுத்தை மாட்டி தூக்கு போடுவது போல் பா வ்லா காட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக சைக்கிள் ஸ்டாண்ட் நழுவி அந்த சைக்கிள் நகர்ந்தது. அடுத்த நொடி ஜெயக்குமார் கழுத்தில் மாட்டி இருந்த நைலான் கயிறு அவரது கழுத்தை இறக்கியது. அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு தனமாக மனைவியை ஏமாற்ற தற்கொலை நாடகம் மாடிய மெக்கானிக் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திள்ளது.

    • பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.
    • கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மலைக்கோ ட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதில் மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதற்காக நேற்று காலையில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக் காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது.

    அதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையல் இடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக் கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகள் நடந்தன.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 14 நாட்கள் வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

    • உறையூர் அருகே ரயில்வே ஊழியர் மனைவியிடம் பல லட்சம் மோசடி நடைபெற்று உள்ளது
    • மோசடி குறித்து 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது

    திருச்சி,

    திருச்சி உறையூர் சுண்ணாம்பு கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. தென்னக ரெயில்வேயில் புக்கிங் கிளார்க்காக பணியாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.அதைத் தொடர்ந்து ஜெயலட்சுமிக்கு கணவரின் பென்சன் தொகை வருகிறது.இதற்கிடையே உறையூர் வண்டிக்கார தெருவில் வசிக்கும் பாலாஜியின் மூத்த சகோதரர் ஜெயச்சந்திரன் (வயது63) சகோதரி பிரபாவதி (வயது 65) ஆகியோர் ஜெயலட்சுமிக்கு சொந்தமான 25 பவுன் நகைகளை அடமானம் வைப்பதற்காக வாங்கியுள்ளனர். மேலும் ரூ. 3 லட்சத்து 97 ஆயிரம் ரொக்க பணத்தையும் கடனாக பெற்றனர் .அது மட்டும் அல்லாமல், பாலாஜியின் பென்சன் தொகையையும் ஜெயலட்சுமியின் ஏடிஎம் மூலம் எடுத்து செலவழித்துள்ளனர்.இந்த நிலையில் குடும்ப தேவைகளுக்காக ஜெயலட்சுமி அடமானம் வைக்க கொடுத்த நகை பணம் மற்றும் ஏடிஎம் கார்டை திரும்ப கேட்டுள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயச்சந்திரன், பிரபாபதி ஆகிய இருவரும் ஜெயலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி அவரது ஆடைகளை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது இதுகுறித்து ஜெயலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து

    விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிடம் தகராறு தட்டி கேட்ட மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்
    • எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை

    திருச்சி,

    திருச்சி சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68 ) இவர் தனது மகளை திருச்சி இடங்களைப் பற்றி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சுதாகர் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இந்த நிலையில் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதை அறிந்து மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் மருமகன் வீட்டுக்கு நியாயம் கேட்க வந்தார்.அப்போது ஆத்திரமடைந்த சுதாகர் மாமனாரை கெட்ட வார்த்தையால் தட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து ராமகிருஷ்ணன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுதாகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள என கடத்தல் தங்கம் பறிமுதல்
    • சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×