என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டாக தூக்கு மாட்டிய மெக்கானிக் பரிதாப சாவு
- மனைவியை மிரட்ட விளையாட்டாக தூக்கு மாட்டிய மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்
- திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28) இவர் இரு சக்கரம் வாகனத்தை பழுது பார்க்கும் வேலை பார்த்து வருகிறார்.மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் மனைவி நிர்மலாவுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். உடனே மனைவியை மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்தில் வீட்டிற்கு வெளியே வந்த சைக்கிளை ஜெயக்குமார் வீட்டுக்குள் தூக்கி வந்தார். பின்னர் மின்விசிறிக்கு கீழே அந்த சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி மேலே ஏறி நின்று கழுத்தில் நைலான் கழுத்தை மாட்டி தூக்கு போடுவது போல் பா வ்லா காட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக சைக்கிள் ஸ்டாண்ட் நழுவி அந்த சைக்கிள் நகர்ந்தது. அடுத்த நொடி ஜெயக்குமார் கழுத்தில் மாட்டி இருந்த நைலான் கயிறு அவரது கழுத்தை இறக்கியது. அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு தனமாக மனைவியை ஏமாற்ற தற்கொலை நாடகம் மாடிய மெக்கானிக் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திள்ளது.






