என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பாலக்கரையில் பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல்
    • செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி  

    திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடம் விரைந்து சென்று அந்த கடையில் சோதனையிட்டார். அப்போது அங்கு 6.3 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து அந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அதன் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில்

    கடையின் உரிமையாளர் செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

    • வடமாநில தொழிலாளர்களுக்கிடையே மோதல்-இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் காயம்
    • மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).

    இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.

    அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.

    இந்நிலையில் தர்மேந்தர் சர்மா என்பவரை சோட்டு, சச்சின் ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதனை கேட்ட சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
    • நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

    டால்மியாபுரம், 

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

    இவர் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 22 ஆண்டுகளாக பணிபு ரிந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

    இப்பகுதியில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில், அன்னாள் ஜெயமேரி நேற்று மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்ததால் அருகில் உள்ள ஆசிரியரிடம் இது குறித்து கேட்டு க்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை செய்து புள்ளம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ெஜயமேரி இறந்துவிட்டதாக கூறினர்.

    இச்சம்பவம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுபோன்று புள்ளம்பாடி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் நடத்த முடியாமல் பல்வேறு ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் .

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் க்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
    • திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை

    மண்ணச்சநல்லூர்,  

    மண்ணச்சநல்லூர் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ மாணவிகள் பள்ளி படிப்புகாகவும், பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் சமயபுரம், திருப்பைஞ்சீலி எதுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான பள்ளி மாணவர்கள் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர்.எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் மண்ணச்சநல்லூர் பணிமனையில் இருந்து சமயபுரம் திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .

    • மனைவி பிரிந்து சென்றதால் தூய்மை பணியாளர் தற்கொலை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருச்சி, 

    திருச்சி பொன்மலை கணேசபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாலி (வயது 49).இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான அவர் கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஈஸ்வரி மகன்,மகளுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று விட்டார். பின்னர் வாலி மட்டும் தனியாக பொன்மலையில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் ஈஸ்வரி மறுத்துவிட்டார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான வாலி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது சகோதரர் ஜெயகோபி பொன்மலை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை திருமணம் செய்வதாக கர்ப்பமாக்கி ஏமாற்றிய வகுப்பு தோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • காதலனை நம்பி கணவருடன் விவாகரத்து

    திருச்சி 

    திருச்சி குமரன் நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 31) இவருக்கும் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின்னர் அனிதா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் தன்னுடன் பள்ளியில் படித்த திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்ட்ரா

    தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்( 31 )என்பவர் உடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்தனர்.

    புதிய நட்பு மலரவும் அனிதா 2021 ல் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

    அதன் பின்னர் ரகுநாதன் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அனிதா கர்ப்பம் அடைந்தார்.

    அதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரகு நாதனை வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். மேலும் காதலியை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா காதலனை தேடி அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரங்கநாதனின் பெற்றோர் அனிதாவை கெட்ட வார்த்தையால் திட்டி அடித்து கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டி துரத்தியதாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து பாதிக்கப்பட்ட அனிதா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய ரகுநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சமயபுரத்தில் மீன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்குள் கணவர் தூக்கிட்டு தற்கொலை

    மண்ணச்சநல்லூர், 

    சமயபுரம் அம்பலகார தெருவை சேர்ந்த மாவடியன் என்பவரது மகன் முருகன் வயது (48) இவருக்கு திருமணம் ஆகி ருக்குமணி வயது (35) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த ஒரு வாரமாக கடையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது நிலையில் கடந்த நாலு நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த முருகன் நேற்று முன்தினம் 'ருக்மணியிடம் நால்ரோடு பகுதியில் உள்ள கடைக்கு சென்று வருகிறேன்' என கூறிவிட்டு சென்ற முருகன் இரவு முழுவதும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவியை ருக்மணி சமயபுரம் பகுதியில் சுற்றி தேடி பார்த்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கரியமாணிக்கம் பிரிவு சாலையில் கண்ணனூர் பேரூராட்சி

    பணியாளர் ஒருவர் அப்பகுதியில் இயற்கை உபாதைகளை கழிக்க சென்ற போது. ஒரு நபர் தூக்கில் தொங்குவதை பார்த்தவுடன் சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றினார்கள்.முதற்கட்ட விசாரணையில் மீன் வியாபாரி முருகன் என்பது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    உனது கணவர் சமயபுரம் கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள போக்குவரத்து நகர் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்குள் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினார்கள்.

    ருக்மணி வீட்டில் இருந்து பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தனது கணவர் முருகன் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

    மேலும் சம்பவ இடத்தில் சமயபுரம் போலீசார் முருகனின் உடலை மீட்டு திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமயபுரம் அருகே கணவன் இறந்த துக்கத்தால் மின் விசிறியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை
    • தூக்கு போட்டு பெண் தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    மண்ணச்சநல்லூர்,  

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து கோணலை காணிக்கை மாதா நகர் கல்பாளையத்தை சேர்ந்தவர் ஜெனிபர் வயது (31) அப்பகுதியில் உள்ள கிங்ஸ்லி ரூபன் என்பவரிடம் கடந்த நான்கு வருடங்களாக கூலிவேலை செய்து வருகிறார். ஜெனிபருக்கு மூன்று மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

    அனைவரும் ஒரே வீட்டில் கல்பாளையத்தில் வசித்து வந்தனர். இவரது தாயார் ஜூலி சகாயமேரி (52) இவரது கணவர் அப்பாத்துரை 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஜூலிசகாய மேரி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தனது முதலாளியை பார்த்து விட்டு வருவதற்காக சென்று இருந்த அவரது மகன் மனைவி ஆகிய இருவரும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தாயார் தூக்கில் தொங்குவதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதா பமாக இறந்துள்ளார்
    • பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    திருச்சி, 

    திருச்சியில் இருந்து விருதாச்சலம் செல்லும் ரெயில் பொன்மலை அருகே சென்ற போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த ரயிலில் அடிபட்டு பரிதா பமாக இறந்துள்ளார். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பொன்மலை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்ம லை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரை பிரிந்து கள்ளக் காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த ெபண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    மண்ணச்சநல்லூர்,

    சமயபுரம் மாடக்குடி பகுதியில் உள்ள வ உ சி நகரை சேர்ந்த பஷீர் (வயது 48) இவர் மனைவி பாத் திமா (43).இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் இனாம் சமயபுரம் முத்து ராஜா தெருவை சேர்ந்த குமரன் (31) கூலி வேலை செய்து வருகிறார். மேலும் குமரனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குமரனு க்கும் பாத்திமாவுக்கு பழக் கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இதில் ஒரு கட்டத்தில் பாத்திமா தனது கணவரை விட்டு பிரிந்து குமரனுடன் நம்பர் ஒன் டோல்கேட் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இதையடுத்து இருவரு க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்ப டுகிறது.இதனால் மனமுடைந்த பாத்திமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்வி சிறியில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய குமரன் தூக்கில் தொங்கி யபடி இருந்து பாத்திமாவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இது குறித்து நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலை யத்திற்கு நேரில் சென்று தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் கொள்ளி டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்ச ம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி ஹோட்டல்களில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்

    திருச்சி,

    நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் கடந்த 16-ந் தேதி சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல்நல க்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இந்த சம்பவத்தை தொட ர்ந்து திருச்சியில் தில்லை நகர், சாஸ்திரி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள சவர்மா கோழி க்கறி மற்றும் அசைவ உண வுகள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாது காப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான அதிகாரிகள் குழுவி னர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் கெட்டுப்போன 200 கிலோ அசைவ உணவுகள் பறி முதல் செய்யப்பட்டு, அழி க்கப்பட்டன.

    இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்க ப்பட்டது. இதில் 6 கடை களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், ஜூஸ்போட அழுகிய பழங்கள் வைத்தி ருந்த ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறுகையில், "சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோதனையின்போது, அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை 

    • ஸ்ரீரங்கத்தில் கான்பரன்ஸ் ஹால், வணிக வளாகத்துடன் ரூ.11 கோடி செலவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது

    திருச்சி, 

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமை க்க உத்தரவிட்டார். அதை த்தொடர்ந்து திருச்சி மாநக ராட்சி நிர்வாகம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகாமையில் ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பெங்களூர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது.பின்னர் அந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் ஒப்படை த்தது. பின்னர் அந்த அறி க்கையை மாநகராட்சி நிர் வாகம் நிதி அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்துக்கு ரஅனுப்பி உள்ள னர்.அதன்படி அங்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 11 கோடியே 10 லட்சம் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.தரைத்தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படு கிறது. அதில் 16 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. முதல் தளத்தில் சிறிய நிகழ்ச்சிகளை நட த்தும் வகையில் கான்பரன்ஸ் ஹால் அமைக்க முன்மொ ழியப்பட்டுள்ளது.8 பஸ்களை நிறுத்தி வை க்கவும், பயணிகள் பஸ்களில் ஏறி இறங்குவதற்கு தனி வசதி அமைக்க ப்படுகிறது.ஒரு கேண்டீன் மற்றும் நேர கண்காணிப்பு அலுவ லகம், ஆண் பெண் இருபா லருக்கும் தனித்தனி கழி ப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் இந்த பஸ்லயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பஸ்களை கையாள உள்ளன.நிதி ஒதுக்கியதும் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க உள்ளனர்.இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தற்போது அனுப்பி உள்ள விரிவான திட்ட அறிக்கை முன்மொ ழிவுக்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும் தொழில்நுட்ப அனுமதிக்கு அனுப்பப்படும்.அதன் பிறகு மாநகராட்சி திட்டத்துக்கான டெண்டரை வெளியிடுவோம். அனேக மாக டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொட ங்கப்படும் என எதிர்பார்க்கி றோம் என்றனர்.

    ×