பெண்ணை திருமணம் செய்வதாக கர்ப்பமாக்கி ஏமாற்றிய வகுப்பு தோழன்

பெண்ணை திருமணம் செய்வதாக கர்ப்பமாக்கி ஏமாற்றிய வகுப்பு தோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை காதலனை நம்பி கணவருடன் விவாகரத்து
பெண்ணை திருமணம் செய்வதாக கர்ப்பமாக்கி ஏமாற்றிய வகுப்பு தோழன்
Published on

திருச்சி 

திருச்சி குமரன் நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 31) இவருக்கும் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின்னர் அனிதா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் தன்னுடன் பள்ளியில் படித்த திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்ட்ரா

தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்( 31 )என்பவர் உடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்தனர்.

புதிய நட்பு மலரவும் அனிதா 2021 ல் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர் ரகுநாதன் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அனிதா கர்ப்பம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரகு நாதனை வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். மேலும் காதலியை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா காதலனை தேடி அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரங்கநாதனின் பெற்றோர் அனிதாவை கெட்ட வார்த்தையால் திட்டி அடித்து கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டி துரத்தியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து பாதிக்கப்பட்ட அனிதா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய ரகுநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com