என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • புங்கனூர் அருகே கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார்
    • மோதலை வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்

    திருச்சி, 

    திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று விடுமுறையில் வீட்டிலிருந்தார்.

    இந்த நிலையில் வீட்டின் அருகாமையில் நேற்று இரவு இரு வேறு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது இந்த தள்ளுமுள்ளு மோதலை உதயகுமார் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இதில் சிக்கிக்கொண்ட அவரை ஒரு கும்பல் தள்ளிவிட்டது. இதில் கீழே விழுந்த அவருக்குதலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் உதயகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் திருச்சி மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மதியம் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த கொலை குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிதடி மோதலை வேடிக்கை பார்த்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • முசிறியில் தொழிலாளி தவறவிட்ட பணத்தை மீட்டு போலீசார்ஒப்படைத்தனர்
    • பணத்தை பெற்ற தொழிலாளி, போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்

    முசிறி,

    முசிறி துறையூர் சாலையில் உள்ள வங்கி பகுதியில் முசிறி போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது வங்கியின் ஏ.டி.எ.ம் அருகில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை எடுத்து பார்த்ததில் ரூ.11 ஆயிரம் மற்றும் அதில் தவறவிட்டவரின் புகைப்படம் ஒன்று இருந்ததை கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பர்சை தவறவிட்டது வடுகப்பட்டியை சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் என்பது தெரிந்து அவரை முசிறி காவல் நிலையத்திற்கு வரவழைத்து மேல் விசாரணை செய்து அவரிடம் உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னர் ரூ.11 ஆயிரம் பணத்துடன் மணி பர்சை காவல் ஆய்வாளர் கதிரேசன், பணத்தை தவறவிட்ட உரியவரான விஸ்வநாதனிடம் வழங்கினார். தொலைந்து போன தனது பணம் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையால் பெற்ற விசுவநாதன் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையால் சேர்ந்த 100 டன் கூடுதல் குப்பைகள்
    • அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், ஸ்ரீரங்கம், பொன்மலை, காட்டூர் என 5 கோட்டங்கள் உள்ளன.இங்கு 2 அரை லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு நான் ஒரு முதல் 450 டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் மாநகரின் அனைத்து தெருக்களிலும் மேலும் 100 டன் பட்டாசு கழிவுகள், புத்தாடை வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியது.

    திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சத்திரம் சத்திரம் பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணியில் இன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    • பயணிகள் வசதிக்காக திருச்சி மண்டலத்தில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது
    • போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் சார்பில் பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்காக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில்13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கும், பிற இடங்களுக்கும 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தீபாவளி பண்டிகை தினத்தில் திருச்சியில் 13 இடங்களில் தீவிபத்து நடைபெற்றது
    • கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடவுன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது

    திருச்சி,

    தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது. திருச்சியில் தீபாவளி தினமான நேற்று முழுவதும் பட்டாசு வெடிக்கும் ஓசை எதிரொலித்து கொண்டே இருந்தது.

    தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர், சத்திரம் பேருந்து நிலையம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக திருச்சியில் ஆங்காங்கே தீவிபத்துக்கள் ஏற்பட்டது. ராக்கெட் பட்டாசு விட்டதினால் ராஜாகாலனி, கே.கே.நகர், அம்மையப்பநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பந்தல் போட வைத்திருந்த கீற்றுகள் பட்டாசு பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. சோழராஜபுரம் பகுதியில் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்து நாசமானது. கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடவுன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பால்பண்ணை மகாலட்சுமிநகர் பகுதியில் கேஸ்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

    இதே போல ஸ்ரீரங்கம் பகுதியில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கீதாபுரம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் பட்டாசு காரணமாக 3 இடங்களில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் ராவேந்திரா அபார்மெண்டில் பால்கனியில் வைத்திருந்த துணிகள் பட்டாசு தீப்பொறியின் காரணமாக எரிந்தது. இதனை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். 

    • டெவில் ரைடர்ஸ்' என்ற இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்தார்.
    • கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் தெரியவந்துள்ளது.

    ஒரு வாலிபர் பைக்கை வீலிங் செய்து கொண்டே அதனுடன் பட்டாசு வெடித்து கொண்டே சென்றார்.

    இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து தனது 'டெவில் ரைடர்ஸ்' என்ற இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்தார்.

    இந்த வீடியோ வைரலானது. இதை கண்ட காவல்துறையினர் அந்த வாலிபரின் அடையாளங்களை இன்ஸ்டா கணக்கின் வழியாக கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    காவல்துறை விசாரணையின் போது இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் பெயர் மணிகண்டன் என்பதும், வீடியோ எடுத்தவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் தெரியவந்துள்ளது.

    • பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது.
    • ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    திருச்சி:

    தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது. திருச்சியில் தீபாவளி தினமான நேற்று முழுவதும் பட்டாசு வெடிக்கும் ஓசை எதிரொலித்து கொண்டே இருந்தது.

    தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர், சத்திரம் பேருந்து நிலையம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக திருச்சியில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டது. ராக்கெட் பட்டாசு விட்டதினால் ராஜாகாலனி, கே.கே.நகர், அம்மையப்ப நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பந்தல் போட வைத்திருந்த கீற்றுகள் பட்டாசு பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. சோழராஜபுரம் பகுதியில் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்து நாசமானது. கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பால்பண்ணை மகாலட்சுமி நகர் பகுதியில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    இதேபோல ஸ்ரீரங்கம் பகுதியில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கீதாபுரம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் பட்டாசு காரணமாக 3 இடங்களில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் ராவேந்திரா அபார் மெண்டில் பால்கனியில் வைத்திருந்த துணிகள் பட்டாசு தீப்பொறியின் காரணமாக எரிந்தது. இதனை ஸ்ரீரங்கம் தீய ணைப்பு துறையினர் அணைத்தனர்.

    • விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர்.
    • சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது . இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர்.

    இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய வருவாய் நுண்ணறிவு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கம் கடத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் தங்கத்தின் தேவை ஏற்பட்டுள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் தங்க நகைகளை வாங்குவதிலும் நகை கடைகளை அதிக அளவில் பொதுமக்கள் நாடிவந்தனர்.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவில் 995 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 67.42 லட்சம் என தெரிய வருகிறது.

    இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது இவரை அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் நகை வடிவில் மறைத்து எடுத்து வந்த 94 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூபாய் 47.75 லட்சம் ஆகும். இதையடுத்து அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூபாய்1.08 கோடி மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.
    • இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.

    திருச்சி

    திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.

    324 எப் மாவட்ட அவை இணை செயலாளர் ஆனந்த கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட நூலக வாசகர் வட்டம் தலைவர் தமிழ் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் கோவிந்தராஜ், உதவும் கரங்கள் அறக்கட்டளை மாநில தலைவி உஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, சேவை திட்டங்கள் வழங்கினார்கள்.

    விழாவில் செயலாளர் பிரசன்ன வெங்கடே ஷன்,பொருளாளர் ரெங்கராஜன், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் பிளட்சாம், இணைசெயலாளர் கரண்லூயிஸ், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கி ணைப்பாளர் சரவணன், இணை செயலாளர் அப்துல் அஜிஸ், சாசன உறுப்பினர்கள் சோனா, பிரசன்னா, ஹோமலதா, ராஜூ ஜோசப், மகேஸ்வரி மற்றும் நண்பர்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.

    • நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.
    • இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

    திருச்சி

    நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.

    இத்திரைப்படத்தின் ஷூட்டிங், திருச்சி - சிதம்பரம் சாலை, சிறுமருதூர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது,

    அந்த வழியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரை கண்டதும், படப்பிடிப்பு குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

    அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த விஷால் அவரை வரவேற்றார். அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு குழுவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் விஷால் உள்ளிட்டோர், அமைச்சர் நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

    பின்னர் எந்த உதவியென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் நேரு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் க. வைரமணி, மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருச்சியில் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ளார்
    • எரிந்த உடலை பாகங்களை ஆற்றில் வீசிய கொடூரம்

    மணச்சநல்லூர்

    சமயபுரம் அருகே மாகாளிக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 30 ). பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.இவருக்கு திருமணமாகி வினோதினி (27) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி பிரபு திடீரென மாயமானார்.பின்னர் வினோதினி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே பிரபு உறவினர்கள், வினோதினிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்புள்ளது என போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உஷாரான துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் மற்றும் போலீசார் வினோதினியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.இதில் சமயபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாரதி (23) என்பவர் உடன் வினோதினிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கள்ளத்தொடர்பு விவகாரத்தை பிரபு கண்டித்ததால் ஆத்திரமடைந்த வினோதினி கள்ளக்காதலன் பாரதியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, பாரதியின் நண்பர்கள் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ரூபன் பாபு (26) ஸ்ரீவான்( 18) திவாகர் (18 )ஆகியோர் உதவியுடன் உடலை திருச்சி மன்னார்புரம் பகுதியில் எரித்ததும் தெரிய வந்தது.மேலும் இந்த சம்பவத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் மீதம் கிடந்த உடல் பாகங்களை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வீசி சென்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    அதைத் தொடர்ந்து வினோதினி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான வினோதினி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    எனக்கும் ஆட்டோ டிரைவர் பாரதிக்கும் கடந்த ஓராண்டாக தொடர்பு இருந்தது.நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். இதனை அறிந்த எனது கணவர் பிரபு என்னை கண்டித்தார். அதைத் தொடர்ந்து நானும் பாரதியும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.அதன்படி கடந்த 4-ம் தேதி மது போதையில் இருந்த பிரபுவுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தோம். இதில் அவர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.பின்னர் தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்தோம்.  பாரதியின் நண்பர்கள் ரூபன் பாபு, ஸ்ரீவான், திவாகர் ஆகியோர் உதவியுடன் மறுநாள் அவரது உடலை திருச்சி மன்னார்புரம் புதர் பகுதியில் எடுத்துச் சென்று தீ வைத்து எரித்தோம்.

    இருப்பினும் உடல் முழுமையாக எரியவில்லை.பின்னர் போலீசுக்கு பயந்து அப்போது அங்கிருந்து சென்று விட்டோம். மறுநாள் எரியாத உடல் பாகங்களை மூட்டையில் எடுத்துக்கொண்டு கை மற்றும் தலைப்பகுதியை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றிலும், கால் பாகங்களை கொள்ளிடம் ஆற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றோம்.  கணவரை காணவில்லை என்று உறவினர்களிடம் நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் என் செல்போனை எடுத்து அதன் மூலமாக துப்பு துலக்கி விட்டனர்.  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    வினோதினியின் கள்ளக்காதலன் பாரதி மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாரதியின் தொடை எலும்பு பகுதி கொள்ளிடம் ஆற்றில் மீட்கப்பட்டது. காவிரியில் தண்ணீர் போக்குவரத்து உள்ளதால் ஆற்றில் வீசப்பட்ட தலை மற்றும் கை பாகங்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கள்ளத் தொடர்பை கண்டித்ததால் கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொலை செய்து உடல் பாகங்களை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வீசிய கொடூர சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    முசிறி

    முசிறி தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிலைய அலுவலர் கர்ணன், காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்கு வரத்தாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தீயணைப்பு துறை நிலை யத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×