என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தனார் அடித்து கொலை - உறவினர்கள் சாலை மறியல்
    X

    கொத்தனார் அடித்து கொலை - உறவினர்கள் சாலை மறியல்

    • புங்கனூர் அருகே கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார்
    • மோதலை வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்

    திருச்சி,

    திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று விடுமுறையில் வீட்டிலிருந்தார்.

    இந்த நிலையில் வீட்டின் அருகாமையில் நேற்று இரவு இரு வேறு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது இந்த தள்ளுமுள்ளு மோதலை உதயகுமார் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இதில் சிக்கிக்கொண்ட அவரை ஒரு கும்பல் தள்ளிவிட்டது. இதில் கீழே விழுந்த அவருக்குதலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் உதயகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் திருச்சி மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மதியம் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த கொலை குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிதடி மோதலை வேடிக்கை பார்த்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×