என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் நடத்திய மகிழ் ஒளி தீபாவளி விழா
- திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.
- இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.
திருச்சி
திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.
324 எப் மாவட்ட அவை இணை செயலாளர் ஆனந்த கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட நூலக வாசகர் வட்டம் தலைவர் தமிழ் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் கோவிந்தராஜ், உதவும் கரங்கள் அறக்கட்டளை மாநில தலைவி உஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, சேவை திட்டங்கள் வழங்கினார்கள்.
விழாவில் செயலாளர் பிரசன்ன வெங்கடே ஷன்,பொருளாளர் ரெங்கராஜன், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் பிளட்சாம், இணைசெயலாளர் கரண்லூயிஸ், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கி ணைப்பாளர் சரவணன், இணை செயலாளர் அப்துல் அஜிஸ், சாசன உறுப்பினர்கள் சோனா, பிரசன்னா, ஹோமலதா, ராஜூ ஜோசப், மகேஸ்வரி மற்றும் நண்பர்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.






