என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
    X

    விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

    • இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    முசிறி

    முசிறி தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிலைய அலுவலர் கர்ணன், காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்கு வரத்தாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தீயணைப்பு துறை நிலை யத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Next Story
    ×