என் மலர்
தேனி
- வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- புகாரின்பேரில் சேவல்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே ரோசனம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது51). இவர் தனது தோட்டத்தில் செட் அமைத்து சண்ைட சேவல்கள் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இறைச்சி கடையில் அவரது சேவல்களை அஜித், சுந்தரேசன், துரைச்சாமி ஆகியோர் விற்க விலை பேசினர்.
இது குறித்து அறிந்ததும் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- குழந்தையுடன் வெளியே சென்ற பெண் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
- புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே எஸ்.அழகாபுரியை சேர்ந்த மோகன்பாபு மனைவி மைப்பாரை (வயது26). இவர்களுக்கு வர்ஷா (8) என்ற மகளும் லோகேஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று குழந்தைகளுடன் மைப்பாரை வெளியே சென்றார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது.
- ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் அய்யப்பன், கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சரவணக்குமார், மகாராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழுவின் தலைவர் பேசியதாவது,
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பதில் அளிக்கும்போது மனுக்களு க்கான பதில்களை சட்டமன்ற பேரவை செய்தியாளர்கள் பதிவு செய்வார்கள். கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள் அடிப்படையில் அறிக்கை யாக தயார் செய்யப்பட்டு பேரவையின் முன் தாக்கல் செய்யப்படும்.
தேனி மாவட்டத்தில் கடந்த 27.7.2010-ம் தேதியன்று குழு ஆய்வு மேற்கொண்டு 2011-ம் ஆண்டு 14-வது பேரவையில் மனுக்கள் குழுவினரால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 15 மனுக்கள் மற்றும் 2013-ம் ஆண்டு அளிக்கப்பட்ட 12 மனுக்கள் என மொத்தம் 25 மனுக்கள் மீது மறுஆய்வு மேற்கொள்ள குழு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- லோயர் கேம்ப் முல்லைப்பெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தடுப்பணை பணிகள் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முல்லைப்பெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது முல்லை ப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பம்பிங் ஹவுஸ், பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் தேனி - கூடலூர் பிரதான சாலையில் கே.புதுப்பட்டி, உத்தம பாளையம், சின்னமனூர் சாலையோரங்களில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் கண்கா ணிப்பு பொறியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.10 அடியாக உள்ளது. 306 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 46.90 அடியாக உள்ளது. 41 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 69.04அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 8.8, தேக்கடி 7.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 10.6, உத்தமபாளை யம் 2.4, வைகை அணை 5.8, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 4, வீரபாண்டி 4, அரண்ம னைப்புதூர் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- பட்டுப்புழுக்கள் 20 நாட்களை கடந்தும் புழுக்களை உற்பத்தி செய்யாததால் பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
- நோய்வாய்ப்பட்ட புழுக்கள் மற்ற புழுக்களையும் பாதித்து வருவதால் தீ வைத்து அழித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் 15-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு கூடு உற்பத்தியாளர்கள் பட்டுப்புழுக்களை வளர்த்து உற்பத்தி செய்து வருகின்றனர். 100 ஏக்கருக்கு மேல் இப்பகுதியில் பட்டுப்புழு உற்பத்தி செய்து மல்பெரி இலைகள் எனப்படும் முசுமுசுக்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் லாபம் ஈட்டித்தரும் இந்த தொழில் இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் அரசு மானியம் பெற முடியாமல் தவித்து வந்தனர். இதனால் குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டு புழுக்கள் செத்து மடிந்து இழப்பை ஏற்படுத்தி வந்தது.
அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையத்திலிருந்து பெறப்படும் பட்டுப்புழு முட்டை ஒன்றுக்கு 450 முதல் 600 முட்டை இடுவதால் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் அளவை பொறுத்து 200 முதல் 300 வரை முட்டைகளை பெற்று அதிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான பட்டுப்புழுக்களுக்கு 12 நாட்கள் வரை மல்பெரி இலைகளை உணவாக வழங்கி வருகின்றனர்.
12-ம் நாளில் பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு உரிய பக்குவம் அடைந்ததும் புழுக்கள் மீது வலைகள் வைக்கப்படும். அதன்மீது 6 நாட்களில் பட்டுப்புழுக்கள் கூடுகளை உற்பத்தி செய்யும். அதன்பிறகு ஓரிரு நாட்களில் முறையாக பராமரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
ஒருசில நாட்கள் தாமதமானாலும் புழுக்களுக்கு இறகுகள் முளைத்து பட்டுப்பூச்சிகளாக மாறி கூட்டைவிட்டு வெளியே வந்துவிடும். இதனால் கூடுகள் சிதைந்து பயனற்றதாகிவிடும். இந்நிலையில் பழனி, தொப்பம்பட்டியில் பெறப்பட்ட பட்டுப்புழுக்கள் 20 நாட்களை கடந்தும் புழுக்களை உற்பத்தி செய்யாததால் பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதனால் புழுக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகிறது. நோய்வாய்ப்பட்ட புழுக்கள் மற்ற புழுக்களையும் பாதித்து வருவதால் தீ வைத்து அழித்து வருகின்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட பட்டுப்புழு உற்பத்தி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஓரிரு மாதங்களிலேயே லட்சக்கணக்கான அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து பட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
- அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி-மதுரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்கிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நெடுஞ்சாலை த்துறை சார்பில் இரட்டை வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படு த்தும் பணிகள் முடிவடைந்து ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மதுரை கோட்ட தேசிய நெடு ஞ்சாலை பொறியாளர் முருகன், தேனி உதவி கோட்ட தேசிய நெடுஞ்சா லை பொறியாளர் ரம்யா, போடி சரக உதவி கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
- வாலிபர் மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது
- வாலிபர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே ஆட்டுபாறையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது25). இவருக்கு திருமணமாகி லத்திகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அழகுபொன்னு கடமலை க்குண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர்:
உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம்,
ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணை ப்பட்டி, ஆனைமலை யான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
- பணத்தை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது37). இவர் அதே பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் வந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்தபோது மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் பேசி உள்ளார். அவர் தான் புதிதாக வாங்கிய காரை குடும்ப சூழ்நிலைக்காக விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி அந்த காரை ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விலை பேசி உள்ளனர். பணத்தை கொடுத்து விட்டு ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் காரை எடுத்துச் செல்லுமாறு அன்புச்செல்வன் கூறி உள்ளார். அதன்படி அங்கு வந்தபோது அன்புச்செல்வன் அங்கு இல்லை. தான் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் வந்து விட்டதாகவும் தனது நண்பர்கள் முருகன் மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் இது குறித்து கூறி உள்ளேன். அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
அதன்பேரில் மதன்ராஜ் பணத்தை கொடுத்து விட்டு காரை தனது ஊருக்கு எடுத்து சென்றார். பின்னர் அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.
சிறிது நாளில் இந்த கார் திருடப்பட்டது என கூறி கேரள போலீசார் அதனை பறிமுதல் செய்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் தான் கார் வாங்கிய மதன்ராஜிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அதன்பிறகு அன்புச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் பேச மறுத்துவிட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மதன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் மீது மதுரை, சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இதேபோல திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சின்னமனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
- ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்தியப்படாது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர், மார்க்கைய ன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சின்ன மனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாயி தங்கவேலு தெரிவிக்கை யில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடை பெற்றது. சின்னமனூர் வட்டாரத்தில் முதன்முறை யாக இந்த பணியை நான் மேற்கொண்டுள்ளேன். இதற்கு ரூ.550 கட்டணமாக வாங்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்திய ப்படாது. இருந்தபோதும் பணி குறைகிறது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை மற்ற விவசாயிகள் பயன்படுத்து வார்களா என்பது விரைவில் தெரியும் என்றார்.
- தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
- இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு ஆயுதக் கலைகள் சார்ந்த போட்டி நடைபெற்றது. பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமை வகித்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 சிலம்பாட்ட பயிற்சி அணியினர் பங்கேற்றனர்.
தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர். அவர்களுக்கு டி.எஸ்.பி. கீதா பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்.
- ஆற்றின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர்.
- எனவே உடைந்த மது பாட்டில்கள் ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் வருசநாடு மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை கழிவு நீருடன் சேர்த்து பிளாஸ்டிக் குப்பைகளும் ஆற்றில் கலக்கிறது.
இதனால் ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஆற்றின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். அதில் சிலர் மது பாட்டில்களை ஆற்றில் உடைத்து வீசுகின்றனர்.
இதனால் ஆற்றில் நீர்வரத்து ஏற்படும்போது உடைந்த மது பாட்டில்கள் ஆறு முழுவதும் பரவி விடுகிறது. எனவே உடைந்த மது பாட்டில்கள் ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் கால்களை பதம் பார்த்து விடுகிறது. நேற்று வருசநாடு கிராமத்தில் கனமழை பெய்தது. அப்போது சாக்கடை நீருடன் பிளாஸ்டிக் குப்பைகளும் ஆறு முழுவதும் பரவி விட்டது. இதன் அருகே உறை கிணறுகள் அமைந்துள்ளதால் குடிநீர் மாசடையும் நிலை உள்ளது.
எனவே ஆற்றில் மது அருந்துவதை தடுப்பதுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற வேண்டும், மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.






