என் மலர்
நீங்கள் தேடியது "agricultural work is busy"
- கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- இதன் காரணமாக 2-வது உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
கூடலூர்:
கேரள எல்லை யில்அமை ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் முதல் போக நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாத போதும் 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்வதும், ஏமாற்றுவதுமாக இருந்தது.
இதனால் நாற்றாங்கால் அமைத்த விவசாயிகள் கவலை அடைந்தனர். இருந்தபோதும் தொடர்ந்து நடவு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட பயிரில் கதிர் தள்ளும் நிலையில் உள்ளது.
எனவே தற்போது பெய்து வரும் மழை அதற்கு ஏதுவாக இருக்கும். இதன் காரணமாக 2-வது உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இதுமட்டு மல்லாது மானாவாரியாக அவரை, தட்டை, மொச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழை இதற்கு செழித்து வளர உதவியாக இருக்கும்.
ஏல தோட்ட விவசாயி களும் மழை இல்லாததால் தண்ணீரை டிராக்டர் மற்றும் லாரிகளில் பணம் கொடுத்து வாங்கி வாடிய பயிர்களை காப்பாற்றி வந்தனர்.
ெதாடர் மழை காரண மாக ஏலச்செடிகள் மீண்டும் செழித்து வளர தொடங்கி உள்ளன.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக உள்ளது. 515 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளது. 77 கன அடி நீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உள்ளது. 82 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.06 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 49.6, தேக்கடி 19.2, போடி 0.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






