என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே கனமழையினால் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் தவிப்பு
    X

    குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

    ஆண்டிபட்டி அருகே கனமழையினால் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் தவிப்பு

    • அய்யனார்புரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் கனமழையால் மழைநீர் தேங்கியது.
    • வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அய்யனார்புரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தண்ணீர் அதிக அளவு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் மழை காலங்களில் எல்லாம் இப்பகுதி மக்கள் இதேபோன்ற துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×