search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை உயர்ந்த வாகனங்களை திருடி ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்று மோசடி
    X

    கைது செய்யப்பட்ட மோசடி கும்பல்.

    விலை உயர்ந்த வாகனங்களை திருடி ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்று மோசடி

    • விற்கப்பட்ட ஒரு காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது.
    • போலியான ஆவணங்களை தயாரிப்பது, வாகனங்களை திருடுவது, அதனை எவ்வாறு விற்று கைமாற்றுவது போன்ற நுட்பங்களை அறிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம். இவர் 4 சக்கர வாகனங்கள் விற்பனை செய்வதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்து தூத்துக்குடியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் அன்புச்செல்வத்தை தொடர்பு கொண்டார்.

    அவர் தனது காரை ரூ.9.10 லட்சத்துக்கு விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தார். அன்புச்செல்வத்துடன் அவரது கூட்டாளிகள் மதுரை கோச்சடையை சேர்ந்த முருகன், கொடி குளத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் மதன்ராஜிடம் காரை விற்றனர். அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மதன்ராஜ் விற்றார்.

    இந்நிலையில் அந்த கார் திருட்டு கார் என தெரிய வரவே அதனை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி அன்புச்செல்வம், அவரது நண்பர்கள் ஆகியோர் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த அயோத்திராமனை ஆண்டி பட்டி அருகில் உள்ள கொண்டம நாயக்கன்ப ட்டிக்கு வரவழைத்தனர்.

    அவரிடம் ரூ.4.70 லட்சம் பெற்றுக்கொண்டு டிராக்ட ரை விற்பனை செய்தனர். இதனை பெயர் மாற்றம் செய்வதற்கு சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக த்திற்கு கொண்டு சென்ற போது இது திருட்டு டிராக்டர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அயோத்திராமனும் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அன்புச்செல்வன் மற்றும் அவரது நண்பர்க ளான முருகன், ஆனந்த், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகிய 6 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    விலை உயர்ந்த வாகன ங்களை திருடி அதனை ஓ.எல்.எக்ஸ் என்ற இணைய தளம் மூலம் இவர்கள் விற்று வந்துள்ளனர். விற்கப்பட்ட ஒரு காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரும் 3 குழுக்க ளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். போலியான ஆவணங்களை தயாரிப்பது, வாகனங்களை திருடுவது, அதனை எவ்வாறு விற்று கைமாற்றுவது போன்ற நுட்பங்களை அறிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

    இவர்களிடமிருந்து போலியான அரசின் ரப்பர் ஸ்டாம்பு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளன. வாகனத்தின் என்ஜின்நம்பர், சேஸ்நம்பர், ஆர்.சி.புக் போன்ற அனை த்து ஆவணங்களையும் இவர்களே போலியாக தயார் செய்துள்ளனர். விலை உயர்ந்த கார், டிராக்டர், ஜே.சி.பி வாக னத்தை இக்கும்பல் திருடி வந்துள்ள னர். எனவே பொதுமக்கள் இணையதளம் மூலம் வாகனங்கள் விற்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். கைது செய்யப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்த கும்பலுடன் வேறுயாரேனும் கொள்ளை யில் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×