என் மலர்
நீங்கள் தேடியது "3 peoples arrested"
- தாமரைக்குளம் பகுதியில் ஒருவீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.
- கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் புகுந்த திருட்டுகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதனைதொடர்ந்து தாமரைக்குளம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து கைவரிசை காட்டிய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 5 நபர்களின் விபரங்களை சேகரித்த போது அவர்கள் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து 2 சிறுவர்கள் மற்றும் மதுசூதனன்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் மதுசூதனன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 சிறுவர்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகள் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதா என உண்மை தன்னை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
- அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பண்ணைப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரபிரபு (வயது 48), கோம்பையைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (37), பண்ணைப்புரம் 9-வது வார்டைச் சேர்ந்த இளங்குரமன் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் எங்கிருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்தனர்? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






