என் மலர்tooltip icon

    தேனி

    • சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் அப்பாவுபிள்ளை நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது போடியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள காமராஜர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பவளம் நாகராஜ் (வயது 84). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோம்பை ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் பாபுத்தாய் (56). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மூட்டு வலி காரணமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

    இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது.
    • லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.

    நேற்று 1000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1401 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3182 மி.கன அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் அணையின் நீர் மட்டம் 123 அடியை எட்ட உள்ளது. இம்மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விடும். இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 55.09 அடியாக உள்ளது. வரத்து 2042 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2733 மி.கன அடி.

    57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.95 அடியை எட்டியதால் அணையில் இருந்து நேற்று முதல் தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது.

    126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து 93 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 80.69 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 17.4, தேக்கடி 2.4, உத்தமபாளையம் 0.8, சண்முகாநதி அணை 1, போடி 15.4, வைகை அணை 64, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 95, பெரியகுளம் 90, வீரபாண்டி 4.8, அரண்மனைப்புதூர் 13.8, ஆண்டிபட்டி 31.6, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • போடி மெட்டு மலைச் சாலையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 600 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் மலைச்சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
    • மேலும் போடி மெட்டு மலைச்சாலையில் தடுப்புச் சுவர் தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி கிடப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு முக்கிய மலைச்சாலையாகும்.

    சுமார் 17 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ள இந்த போடி ெமட்டு மலைச் சாலையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 600 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் மலைச்சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

    தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறி வாகனங்கள், பால்வண்டி, வாகனங்கள் மற்றும் தினசரி போக்குவரத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூப்பாறை, கஜானா பாறை, பி.எல்.ராவ், தோண்றி மலை போன்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கும், ஏலக்காய் தோட்டங்களுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகளும் பயணம் செய்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களும் சென்று வருகின்றது.

    இப்பகுதியில் முக்கிய வர்த்தக பயிரான ஏலக்காய் மூடைகள் கொண்டுவரும் வாகனங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் இப்பகுதியில் மிகப்பெரும் அளவில் பாறைகள் சரிந்து விழுந்து விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பல நாட்கள் போராடி அந்த பாறைகள் அகற்றப்பட்டன.

    ஆனால் சுமார் 600 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவர் மீண்டும் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டதால் வாகனங்கள் மிகுந்த ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    4-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் வாகனங்கள் கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பயணித்து வருகின்றன.

    மேலும் போடி மெட்டு மலைச்சாலையில் தடுப்புச் சுவர் தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி கிடப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருப்பதால் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இந்த போடி மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைத்து உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது. மின் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.
    • இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தான்

    வருசநாடு:

    வருசநாடு அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சகில்ராஜா மகன் லோகிதன் (வயது7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பரமன் என்பவர் வீட்டில் மின் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.

    அந்த வயரை எதிர்பாராத விதமாக லோகிதன் பிடித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் வருசநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே லோகிதன் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நோய் கொடுமையால் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் மணி (55). கடந்த சில நாட்களாக நோய் கொடு மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கினார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (67). இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விஷம் அருந்தி மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது வேலுச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சடப்பணிகள் ஆணையக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது.
    • 2 குடும்ப நல வழக்குகள், ஒரு சிவில் வழக்கு, 18 மோட்டார் வாகன விபத்து வழக்கு என 21 வழக்குகளுக்கு தீர்வு காண ப்பட்டது.

    தேனி:

    தேனி, உத்தமபாளையம் கோர்ட்டில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தீர்வு காண மாவட்ட சடப்பணிகள் ஆணையக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது.

    தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட முதன்ைம நீதிபதி அறிெவாளி தலைமை தாங்கினார்.

    மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணையர் குழு செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு மக்கள் நீதிமன்ற நீதிபதி சுந்தரி, சார்பு நீதிபதி மாரியப்பன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இேதபோல் உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா தலைமையில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ரமேஷ், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நீதிமன்ற ங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 2 குடும்ப நல வழக்குகள், ஒரு சிவில் வழக்கு, 18 மோட்டார் வாகன விபத்து வழக்கு என 21 வழக்குகளுக்கு தீர்வு காண ப்பட்டது. மேலும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.5.53 கோடி இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட ப்பட்டது.

    • தொழிலாளி வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் முத்து மனைவி செல்வி (37). கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2வது மகளுடன் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் வசித்து வருகிறார். தேவாரம் பஸ்நிலையத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.
    • இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சின்னமனூர் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    குடிநீர் வினியோகம் விரைவில் சீராகும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்து ப்பாறை, சண்மு காநதி அணை உள்ளி ட்ட அணை களுக்கும், குளங்கள், கண்மா ய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளான பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணை உள்ளிட்ட அணைகளுக்கும், குளங்கள், கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. நேற்று 1157 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2166 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3176 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரே ட்டர்கள் இயக்கப்பட்டு 90 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 54.04 அடியாக உள்ளது. நேற்று 884 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1567 கனஅடியாக அதிகரித்து ள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2565 மி.கன அடியாக உள்ளது.

    தேவதானப்பட்டி அருகில் உள்ள 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை 54.95 அடியாக உயர்ந்தது. ஏற்கனவே 2ம் கட்ட வெள்ள அபாய எச்ரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 3ம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது அணைக்கு 47 கனஅடி நீர் வருகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட ங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவி டப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை முதல் அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேவதானப்பட்டி, ஜி.கல்லு ப்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மேலும் பழைய ஆயக்கட்டு பகுதியில் 3386 ஏக்கர் நிலங்களுக்கு 60 கன அடி திறக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பொதுப்பணித்துறையினர் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக உள்ளது. வரத்து 125 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 72.73 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் இன்று 4- ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 28.6, தேக்கடி 12.6, கூடலூர் 9.8, உத்தமபாளையம் 11, சண்முகாநதி அணை 11.6, போடி 10, வைகை அணை 29, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 15.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தி.மு.க மகளிரணி உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
    • மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

    போடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க மகளிரணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல பெண் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    சென்னைக்கு வந்த சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் சொத்து பாது காப்பு கமிட்டி தலைவரும், தேனி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ஆரூண் கூறுகையில்,

    மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல் வேளச்சேரி எம்.எல்.ஏ அசன் மவுலானா, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் இம்ரான்கான் ஆகியோர் பிரமுகர்களை வரவேற்றனர்.

    • தொழிலாளி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள புத்த ம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இன்று காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீப்பா லக்கோட்டை அடுத்துள்ள கருப்புசாமி கோவில் பிரிவில் சென்றபோது எதிரில் வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி உயிரிழந்தார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×