என் மலர்
தேனி
- நோய் கொடுமையால் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் மணி (55). கடந்த சில நாட்களாக நோய் கொடு மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கினார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (67). இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விஷம் அருந்தி மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது வேலுச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சடப்பணிகள் ஆணையக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது.
- 2 குடும்ப நல வழக்குகள், ஒரு சிவில் வழக்கு, 18 மோட்டார் வாகன விபத்து வழக்கு என 21 வழக்குகளுக்கு தீர்வு காண ப்பட்டது.
தேனி:
தேனி, உத்தமபாளையம் கோர்ட்டில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தீர்வு காண மாவட்ட சடப்பணிகள் ஆணையக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட முதன்ைம நீதிபதி அறிெவாளி தலைமை தாங்கினார்.
மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணையர் குழு செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு மக்கள் நீதிமன்ற நீதிபதி சுந்தரி, சார்பு நீதிபதி மாரியப்பன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இேதபோல் உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா தலைமையில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ரமேஷ், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நீதிமன்ற ங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 2 குடும்ப நல வழக்குகள், ஒரு சிவில் வழக்கு, 18 மோட்டார் வாகன விபத்து வழக்கு என 21 வழக்குகளுக்கு தீர்வு காண ப்பட்டது. மேலும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.5.53 கோடி இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட ப்பட்டது.
- தொழிலாளி வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் முத்து மனைவி செல்வி (37). கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2வது மகளுடன் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் வசித்து வருகிறார். தேவாரம் பஸ்நிலையத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.
- இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சின்னமனூர் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குடிநீர் வினியோகம் விரைவில் சீராகும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
- பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்து ப்பாறை, சண்மு காநதி அணை உள்ளி ட்ட அணை களுக்கும், குளங்கள், கண்மா ய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளான பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணை உள்ளிட்ட அணைகளுக்கும், குளங்கள், கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. நேற்று 1157 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2166 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3176 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரே ட்டர்கள் இயக்கப்பட்டு 90 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 54.04 அடியாக உள்ளது. நேற்று 884 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1567 கனஅடியாக அதிகரித்து ள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2565 மி.கன அடியாக உள்ளது.
தேவதானப்பட்டி அருகில் உள்ள 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை 54.95 அடியாக உயர்ந்தது. ஏற்கனவே 2ம் கட்ட வெள்ள அபாய எச்ரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 3ம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அணைக்கு 47 கனஅடி நீர் வருகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட ங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவி டப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை முதல் அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேவதானப்பட்டி, ஜி.கல்லு ப்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் பழைய ஆயக்கட்டு பகுதியில் 3386 ஏக்கர் நிலங்களுக்கு 60 கன அடி திறக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பொதுப்பணித்துறையினர் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக உள்ளது. வரத்து 125 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 72.73 மி.கன அடி.
கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் இன்று 4- ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு 28.6, தேக்கடி 12.6, கூடலூர் 9.8, உத்தமபாளையம் 11, சண்முகாநதி அணை 11.6, போடி 10, வைகை அணை 29, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 15.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- தி.மு.க மகளிரணி உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
- மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
போடி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க மகளிரணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல பெண் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
சென்னைக்கு வந்த சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் சொத்து பாது காப்பு கமிட்டி தலைவரும், தேனி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ஆரூண் கூறுகையில்,
மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல் வேளச்சேரி எம்.எல்.ஏ அசன் மவுலானா, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் இம்ரான்கான் ஆகியோர் பிரமுகர்களை வரவேற்றனர்.
- தொழிலாளி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள புத்த ம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இன்று காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீப்பா லக்கோட்டை அடுத்துள்ள கருப்புசாமி கோவில் பிரிவில் சென்றபோது எதிரில் வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி உயிரிழந்தார்.
இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருசநாடு-வாலிப்பாறை சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
- வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருநாடு:
வருசநாடு -வாலிப்பாறை இடையே சுமார் 5 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் அங்கு சாலை அமைக்க அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக சாலையை பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
மேலும் நேற்று வருசநாடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. இதனால் ஆட்டோ க்களில் செல்லமுடியாத நிலையில் பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் பைக்கில் செல்பவ ர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே மாவட்ட அதிகாரிகள் வனத்துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று வரை 800 கனஅடிநீர் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு 1000 கனஅடியாக அதிகரி க்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம்136 அடிவரை உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
வைகை அணை யின்நீர்ம ட்டம் 53.18 அடியாக உள்ளது. அணைக்கு 884 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின்நீ ர்மட்டம் 54.75 அடியாக உள்ளது. 35 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.02 அடியாக உள்ளது. 28 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 7, தேக்கடி 101.4, கூடலூர் 1, உத்தம பாளையம் 3.8, சண்முகா நதிஅணை 2.4, வைகை அணை 3.6, மஞ்சளாறு அணை 18, சோத்துப்பாறை 2, ஆண்டிபட்டி 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.
- சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆண்டி பட்டி, பாலகோம்ைப, புள்ளிமான்கோம்பை, கதிர்நரசிங்கபுரம், ஜம்புளிபுத்தூர், சண்முகநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கனமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனதட்டுப்பாடும் நீங்கும் என அவர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அருகில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மழைநீர் புகுந்தது.
இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவ ர்கள் சிரமம் அடைந்தனர். ஓரத்தில் கற்களை அடுக்கி வைத்து வகுப்பறைக்குள் சென்றனர். பள்ளி மைதானத்தில் நடைபெறும் காலை பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது.
மழைநீர் அகற்றப்படாத தால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பள்ளியில் ஒவ்வொரு முறையும் கனமழை காலங்களில் வளாகத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் அமைத்து மாணவர்களுக்கு சுகாதார மான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளி விளையட்டு மைதானத்தி லும் இன்று மழை நீர் தேங்கி இருந்ததால் மாணவ-மாணவிக்ள சிரமம் அடைந்தனர்.
- போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
- தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும்.
தேனி:
தேனி மாவட்டம் பெரிய குளம், உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.,
இதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பு வோர் ரூ.1000 முன்பணம் செலுத்தி ஏலத்தேதிக்கு முன்பு ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வருக்கே வாகனங்கள் வழங்கப்படும்.
ஏலம் கேட்பவர் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி சேர்த்து செலுத்த வேண்டும். வாகன ஏலம் மற்றும் உறுதிபடுத்தும் குழுவினரால் உறுதிசெய்யப்பட்ட பின்னரே பொருட்கள் ஏலதாரரரிடம் ஒப்படை க்கப்படும்.
- பார் ஊழியரை 2 வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
- புகாரின்பேரில் வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள மது பாரில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரை திறப்பதற்காக பாரதி சென்றார்.
அப்போது அங்கு மருதுபாண்டி, முருகன் ஆகியோர் பொதுவெளியில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தனர். மேலும் பாரதியை பாரை திறக்க ஏன் தாமதமாக வருகிறாய் என கேட்டு தகராறு செய்தனர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.
நாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டி மற்றும் முருகனை கைது செய்தனர்.






