என் மலர்
நீங்கள் தேடியது "இலவச மருத்துவ பரிசோதனை முகாம்"
- மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
- முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
தேனி:
தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் ஆற்றுப்பாலம் அருகே செயல்பட்டு வரும் எம்.எம். மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரி மற்றும் எம்.எம். பல் ஆஸ்பத்திரி சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
பல் எடுத்தல், பல் கட்டுதல், பல் பாதுகாப்பு, பல் தொடர்பான இதர பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் பல் முக சீரமைப்பு டாக்டர் பாஸ்கரன், பொது பல் மருத்துவர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.






