உத்தமபாளையம் அருகே சூதாடிய கும்பல் கைது

உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர்அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.

அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது மைதீன் (வயது40), வல்லரசு (23), மணிகண்டன் (21), ஊத்துப்பட்டியை சேர்ந்த மதிவாணன் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அதே பகுதியில் சூதாடிய மற்றொரு கும்பலை சேர்ந்த சூர்யா (21), ஈஸ்வரன் (32), கார்த்திக் (30), மாரிமுத்து (34) ஆகியோரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com