search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவம் தவறிய மழை:அழுகல் நோய் பாதிக்கப்பட்டு குப்பைக்குச் சென்ற கத்தரிக்காய் -விவசாயிகள் வேதனை
    X

    குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்களை படத்தில் காணலாம்.


    பருவம் தவறிய மழை:அழுகல் நோய் பாதிக்கப்பட்டு குப்பைக்குச் சென்ற கத்தரிக்காய் -விவசாயிகள் வேதனை

    • மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகியதால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது.
    • எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சோலையூர் மலை கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து ள்ள இப்பகுதியில் தற்போது நீல நிற கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.

    சுமார் 60 நாள் பயிரான கத்தரிக்காய் தற்போது அறுவடை செய்யப்படும் நேரத்தில் புழுத்தாக்குதல் நோய் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது. புழுத்தாக்குதல் நோயை கட்டுப்படுத்து வதற்காக மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் இப்பகுதியில் பருவம் தவறி பெய்த சாரல் மழை காரணமாக மருந்தடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தெளிக்கப்படும் மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகிப் போனது. இதனால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது. எனவே விளைந்த கத்தரிக்காயை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் செடியிலிருந்து பறிக்கப்பட்ட கத்தரிக்காய் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது . இப்பகுதி முழுவதும் அழுகிய கத்தரிக்காய் சாலை முழுவதும் கொட்டப்பட்டு அழுகி மட்கி வீணாகிப் போனது. தற்போது கத்தரி க்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.28ல் இருந்து ரூ.30 வரை வாங்கப்படும் நிலையில் புழுத்தாக்குதல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கத்தரி க்காயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் மறுத்து விட்டனர்.

    இதனால் விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளனர். குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய் ஆடு, மாடுகளுக்கு இரையாகி வருகிறது. எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×