தேவாரத்தில் விபத்தில் வாலிபர் பலி

சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உத்தமபாளையம்:

தேவாரம் அப்பாவுபிள்ளை நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது போடியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com