search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youngman died"

    • கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் அப்பாவுபிள்ளை நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது போடியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
    • உத்தமபாளையம் அருகே பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் மேகமலை ஹைவேவிஸ் எஸ்டேட் பேன்சா காலனியைச் சேர்ந்தவர் மந்திரி மகன் கவுதம் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோஜ் (16), ராஜா (15) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    உத்தமபாளையம் அருகே புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்த ஷர்மா (22) என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கவுதமின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது.

    வருசநாடு:

    வருசநாடு அருகே கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35). இவர் கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.

    அதற்கு ஹாலோபிளாக் கற்கள் எடுத்துக் கொண்டு டிராக்டரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது. இதில் தலை மற்றும் உடம்பில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று வேலைக்கு செல்வதற்காக கொசவபட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • சேர்வீடு பிரிவு 4 வழிச்சாலை அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

    நத்தம்:

    நத்தம் அருகே கொசவபட்டியைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 29). இவர் நத்தத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கொசவபட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மதுரை மாவட்டம் சிலைமான் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் சுப்புராயன் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி விட்டு மதுரைக்கு பைக்கில் சென்றார்.

    சேர்வீடு பிரிவு 4 வழிச்சாலை அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் தயாளன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்புராயனுக்கும் காயம் ஏற்பட்டது.

    அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார்.
    • பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 24). இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். புதிய பைக் வாங்கி டி.வாடிப்பட்டியில் வைத்திருந்தார்.

    இந்த வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார். பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அழகர்ராஜா தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்தவரை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் ஆசிக்அகமது (வயது26). இவருடைய மனைவி ஆப்ரின் (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாமனார் வீட்டில் தங்கி கேட்டரிங் சர்வீசில் சமையல் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டு மாடியில் பாத்திரங்களை வைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஆசிக்அகமதுவை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் சிவா (31). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். நேற்று தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வைகை அணை அருகே ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (44). டிரைவர் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றார். இந்த நிலையில் வீட்டில் தவறி விழுந்த அவர் மயக்கமடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர் மகா ராஜன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19).
    • குருக்கள்பட்டி அருகே செல்லும்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர் மகா ராஜன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19). இவர் சம்பவத்தன்று இரவு சங்கரன்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேலநீலிதநல்லூர் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    குருக்கள்பட்டி அருகே செல்லும்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலான்குளம் போலீ சார் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி புதுப்பேட்டை காலனியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராமமூர்த்தி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×