என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான தயாளன்.
நத்தம் அருகே போலீஸ்காரர் வாகனம் மோதி வாலிபர் பலி
- நேற்று வேலைக்கு செல்வதற்காக கொசவபட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- சேர்வீடு பிரிவு 4 வழிச்சாலை அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
நத்தம்:
நத்தம் அருகே கொசவபட்டியைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 29). இவர் நத்தத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கொசவபட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மதுரை மாவட்டம் சிலைமான் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் சுப்புராயன் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி விட்டு மதுரைக்கு பைக்கில் சென்றார்.
சேர்வீடு பிரிவு 4 வழிச்சாலை அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் தயாளன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்புராயனுக்கும் காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






