திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com